அடித்தார், கள்ளத் தொடர்பு வைத்தார்... மனைவி புகாரால் ராஜினாமா செய்த கேரள அமைச்சர்

கணேஷ்குமாரின் மனைவி டாக்டர் யாமினி தங்கச்சி போலீஸில் தனது கணவர் மீது கொடுத்த புகாரைத் தொடர்ந்து பதவி விலகினார் கணேஷ் குமார். முன்னதாக யாமினி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், எனது கணவர் என்னை தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தி வருகிறார். கடந்த 14 வருடமாக அவரிடம்சித்திரவதையை அனுபவித்து வருகிறேன். மேலும் சமீபத்தில் என்னைக் கட்டி வைத்து அவர் அடித்து உதைத்தார்.
எனது மகனின் நண்பனின் தாயாரோடு அவருக்கு கள்ளத் தொடர்பும் உள்ளது என்று பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார்.
இதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் விவாகரத்து கோரி கோர்ட்டில் மனு செய்திருந்தார் கணேஷ் குமார். அதில் தனது மனைவி தன்னை அடித்து துன்புறுத்தியதாக அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள காங்கிரஸ் பாலகிருஷ்ணன் பிரிவைச் சேர்ந்தவர்தான் கணேஷ்குமார். பாலகிருஷ்ணனின் மகன்தான் இவர். சமீபத்தில்தான் அப்பாவுக்கும், மகனுக்கும் முட்டிக் கொண்டு பின்னர் இருவரும் சமாதானமானார்கள் என்பது நினைவிருக்கலாம். கடந்த மாதம் இருவருக்கும் பிரச்சினை வந்தபோது மகனின் கள்ளத் தொடர்பைக் காரணமாக காட்டி அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு பாலகிருஷ்ண பிள்ளை முதல்வர் சாண்டிக்கு கோரிக்கை வைத்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications