அரசின் உதவியை நாடி நிற்கும் 6 லட்சம் ஆட்டிசம் குழந்தைகள் ..குஜராத்தில் மட்டும் 10,000
அகமதாபாத்: இந்தியாவில் 6 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் ஆட்டிசம் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர் . இதில், 10 ஆயிரம் குழந்தைகள் குஜராத்தை சேர்ந்தவர்கள் என ஆட்டிசம் பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கும் மூத்த நிபுணர் டாக்டர். கேதன் பட்டேல் தெரிவித்துள்ளார்.
இதனைக் குறித்து டாக்டர். கேதன் கூறியதாவது, ‘பொதுவாக ஆட்டிச பாதிப்பிற்கு ஆளாவோரின் சமூக மற்றும் தொடர்பு கொள்ளும் திறன் ஆகியவை, அவர்களது மூளையின் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி விடுவதுடன் இயல்பான மூளை மேம்பாட்டு திறன் பாதிப்பை ஏற்படுத்திவிடுவதும் குறிப்பிடத்தக்கது.
அரசு இதற்கு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் திருப்தியளிக்கும் வகையில் இல்லை. குழந்தை பருவத்தில் ஏற்படும் புற்றுநோய், நீரிழிவு மற்றும் எய்ட்ஸ் பாதிப்பு ஆகியவற்றால் பரவலாக காணப்படும் பாதிப்பை காட்டிலும் 110 பேரில் ஒரு குழந்தை என்கிற அடிப்படையில் ஆட்டிசம் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது' என்று தெரிவித்தார்.
மேலும், 'அமெரிக்காவில் 50ல் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு உள்ளது. உலகளவில் இந்நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கது. எனவே, இந்திய மருத்துவ கவுன்சில் ஆட்டிசம் குறித்து சிறப்பு படிப்பு தொடங்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சமீபத்தில் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது ஆகும்' என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications