நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம்.. - விஜயகாந்த்; ஐயோ 'வேணாம் வேணாம்'- திமுக!

Subscribe to Oneindia Tamil

DMDK to boycott 2014 general elections!
சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இந்த முடிவு தவறு.. தேர்தலில் பங்கேற்று நாடாளுமன்றம் போய் மக்களுக்காக போராட வேண்டும் என திமுக கூறியுள்ளது. பாஜகவும் விஜயகாந்த் முடிவு தவறு என கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டில் நேற்று இரவு நடைபெற்ற கட்சியின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், சட்டப்பேரவையில் இருந்து தமது கட்சி உறுப்பினர் ஆறு பேர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

இலங்கை தமிழர் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை கடுமையாகச் சாடிய அவர், இந்த விவகாரத்திற்காக நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்தார். பிற கட்சிகளும் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

தனது பேச்சில், "நான் நடிகராக இருந்ததிலிருந்தே இலங்கை தமிழர்களுக்காக பலவகையில் போராடி உள்ளேன். என் மகனுக்கு விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பெயர் வைத்துள்ளேன். இலங்கை தமிழர்கள் முகத்தில் சிரிப்பை காணும் வரை என் பிறந்தநாளை கொண்டாட கூடாது என்று முடிவெடுத்து, அதன்படி நடந்து வருகிறேன்.

கட்சி தொண்டர்களின் வேண்டுகோளுக்கு இணங்க எனது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடி வருகிறேன். 2009ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை இலங்கை பிரச்சினைக்காக தே.மு.தி.க. புறக்கணித்தது. மற்ற கட்சிகளையும் புறக்கணிக்க வலியுறுத்தினேன். ஆனால் யாரும் செய்யவில்லை. அப்படி புறக்கணித்திருந்தால் பிரபாகரன் உயிரோடு இருந்திருப்பார். தமிழ்ஈழ மக்களுக்கும் விடுதலை கிடைத்திருக்கும்.

தற்போது வருகின்ற பாராளுமன்ற தேர்தலை இலங்கை தமிழர்களுக்காக தே.மு.தி.க. நிச்சயம் புறக்கணிக்கும். மற்ற கட்சிகளும் கண்டிப்பாக தேர்தலை புறக்கணிக்க வேண்டும்," என்றார்.

வேணாம் வேணாம்...

ஆனால், தேமுதிகவினர் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதால், இலங்கை தமிழர் பிரச்சனையில் எந்த மாற்றமும் ஏற்டப்போவதில்லை என திமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தெரிவித்துள்ளன.

நமக்கான பிரச்சனைகளைப் பேசுவதற்கும், கருத்துக்களை பதிவு செய்வதற்கும் ஏற்ற இடம் நாடாளுமன்றம் என்பதை விஜயகாந்த் புரிந்துக் கொள்ள வேண்டும் என திமுக கூறியுள்ளனது. எந்த காரணம் கொண்டும் எந்த தேர்தலையும் புறக்கணிப்பது சரியான தீர்வாக இருக்காது என பாஜக கருத்து தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+