ஈஸ்டரை கவர்ச்சிகரமாக கொண்டாடிய ஜெர்மன் அதிபர் ஏஞ்செலா!

கடுமையான, இறுக்கமான அரசியல்வாதி என்றுதான் மெர்க்கலைஜெர்மனியில் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவரது மென்மையான மறுபக்கத்தை இந்த கொண்டாட்டம் காட்டுகிறது.
ஒவ்வொரு ஈஸ்டருக்கும் இத்தாலியில்உள்ள இஸ்சியா தீவுக்குப் போய் விடுவாராம் மெர்க்கல்.அங்குதான் அவர் ஜாலியாக ஈஸ்டரைக் குடும்பத்துடன் கொண்டாடுவார். இந்த முறையும் அப்படியே செய்தார்.
போன இடத்தில் ஒரு பஞ்சாயத்து
ஈஸ்டருக்காக இந்த முறை இஸ்சியா தீவுக்குப் போனபோது ஒரு கவலைக்குரிய விஷயத்தை அவர் கேட்க நேரிட்டது. அதாவது அவருக்கு அந்த தீவில் பலவருடமாக பரிச்சயமான ஒரு ஹோட்டல் ஊழியர் வேலையிழந்ததாகவந்த செய்தியால் கவலை அடைந்தார் மெர்க்கல்.
நேரில் போய் ஆறுதல்
உடனே அந்த ஊழியரை நேரில் போய்ப் பார்த்தார். வேலை இழப்பு குறித்து கேட்டறிந்தார். பிறகு தைரியமாக இருங்கள், வேறு வேலை கிடைக்கும் என ஆறுதல் கூறினாராம் மெர்க்கல். இதைக் கேட்டு அந்த ஊழியரின் குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சி அடைந்தனராம்.
ஊழியருக்காக வருந்திய மெர்க்கல்
அந்த ஊழியர் ஹோட்டல் மிராமரே என்ற ஹோட்டலில் வேலை பார்த்தவர் ஆவர். இஸ்சியா வரும்போதெல்லாம் இந்த ஹோட்டலில்தான் தங்குவார் மெர்க்கல். அப்போதுதான் அந்த ஊழியருடன் நட்பு ஏற்பட்டதாம்.
அம்மா வந்தது சந்தோஷம்... மகள் பெருமிதம்
தனது தாயார் மெர்க்கல் தீவுக்கு வந்தது குறித்து மகள் மரியானா மகிழ்ச்சி தெரிவித்தார். எநது தாயாரையும், தந்தையையும் சேர்த்துப் பார்த்தது சந்தோஷமாக இருக்கிறது. அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக ஈஸ்டரைக் கொண்டாடினர். எங்களுடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிட்டார்கள் என்று கூறியுள்ளார் மரியானா.
நீச்சலடித்து சந்தோஷம்
ஈஸ்டரை குடும்பத்துடன் கொண்டாடிய மெர்க்கல் நீச்சல் உடையில் நீச்சலடித்தும் சந்தோஷப்பட்டார். அவருடன் கணவர் ஜோக்கிம் சாவரும் நீச்சலில் கலந்து கொண்டார்.
சான்சலராக இருந்தால் என்ன மெர்க்கலும் ஒரு சாதாரண பெண்தானே...!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications