சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை.. ஆஸி.யில் கத்தோலிக்க பாதிரியார்கள் மீதான விசாரணை ஆரம்பம்!

Subscribe to Oneindia Tamil

சிட்னி: ஆஸ்திரேலியாவில் மத நிறுவனங்களுக்கு எதிரான சிறார்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான விசாரணையை 6 பேர் கொண்ட கமிஷன் தொடங்கியிருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் ரோமன் கத்தோலிக்க பாதிரியார்கள், சிறார்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் அந்நாட்டு பிரதமர் ஜூலியா கில்லார்ட் 6 பேர் கொண்ட விசாரணைக் கமிஷனை அறிவித்தார். இதைத் தொடர்ந்து சுமார் 6,000 பேர் தொலைபேசியிலும் எழுத்து மூலமாகவும் தங்களுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் விடுக்கப்பட்டதாக புகார் கூறியுள்ளனர்.

இந்நிலையில் அரசு அறிவித்தபடி விசாரணைக் கமிஷன் நேற்று தமது விசாரணையைத் தொடங்கியது. நீதிபதி பீட் மெக்கெல்லன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு விசாரணயைத் தொடங்கியிருக்கிறது.

இக்குழு முன்பு சுமார் 5,000க்கும் அதிகமானோர் ஆஜராகி தங்களதுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்களை விவரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இக்குழு முன்பு ஆஜராகி சாட்சியமளிப்போர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவர். அத்துடன் பொய்யான குற்றச்சாட்டு தெரிவித்தால் சிறைத் தண்டனையும் அனுபவிக்க நேரிடும். வரும் 2015ம் ஆண்டு வரை இந்த விசாரணை நடைபெற உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+