குற்றம் செய்ய வாய்ப்பு இருக்கா? மூளை ஸ்கேன் மூலம் அறியலாமாம்!

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் அமைந்துள்ள மைண்ட் ரிசர்ச் நெட்வொர்க்கில் இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஆய்வுகள் மூளையின் குறிப்பிட்ட பாகத்துடைய ஸ்கேன் முடிவுகளை ஆராய்வதன் மூலம் ஒருவர் எதிர்காலத்தில் மீண்டும் தவறு செய்யக்கூடிய வாய்ப்பு பற்றி புரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கின்றன.
சட்டென முடிவெடுக்கும்படியான கணினி விளையாடுகளை சிறைக் கைதிகளை விளையாட வைத்து, அந்த நேரத்தில் அவர்களது மூளைச் செயல்பாடுகளை எம் ஆர் ஐ ஸ்கேன் செய்து ஆராய்ந்து இந்த பரிசோதனையை ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் பல சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.
மூளையின் மேற்பரப்பில் அண்ட்டீரியர் சிங்குலேட் கார்ட்டெக்ஸ் என்ற பகுதி நமது நடத்தை, நமது உணர்வுப் பெருக்கு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் பங்காற்றுகிறது.
குற்றங்களைச் செய்தவர்கள், சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் ஆகியவர்களது மூளையில் அண்டீரியர் சிங்குலேட் கார்டெக்ஸ் என்ற குறிப்பிட்ட இந்த பாகத்தில் செயல்பாடுகள் குறைவாக இருந்தால் அவர்கள் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
எதிர்காலத்தில் குற்றவியல் நீதிக் கட்டமைப்பு செயல்படும் விதம், குற்றவாளிகள் கையாளப்படும் விதம் போன்றவற்றில் இந்த ஆய்வின் முடிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என மைண்ட் ரிசர்ச் நெட்வொர்க்கில் மொபைல் இமேஜிங் பிரிவின் இயக்குநராகவும் நியூமெக்ஸிகோ பல்கலைக்கழகத்தில் பேராசியராகவும் உள்ள கெண்ட் கியெல் கூறுகிறார்.
இதன் மூலம் மீண்டும் குற்றமிழைக்க வாய்ப்புள்ளவர்களாக அடையாளம் காணப்படுபவர்களுக்கு, அவர்கள் திருந்துவதற்கு உதவும் வகையில் மனநல பயிற்சிகளை அளிக்க முடியும் என்று பேராசிரியல் கியெல் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications