For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரெஸ்டாரென்ட் தெரியும், 'கிளுகிளு' ‘பிரஸ்ட்டாரென்ட்’ கேள்விப்பட்டிருக்கீங்களா?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பசி எடுத்தால் நல்ல ஹோட்டலுக்கு போய் சாப்பிலாம் என்று தோன்றும். ருசியான சாப்பாடு எங்கே கிடைக்கிறதோ அங்கேதான் வாடிக்கையாளர்கள் தேடிப்போய் சாப்பிடுவார்கள். ஆனால் ருசிக்கு பதிலாக கவர்ச்சியைப் புகுத்தி காசை அள்ளுகின்றன அமெரிக்காவில் சில ஹோட்டல்கள்.

மினி ட்ரவுசர், மிகச்சிறிய அளவிலான மேலாடை, அதுவும் கவர்ச்சியான அங்கங்கள் வெளியே தெரியும் வகையில் உடை அணிந்த கன்னியர்கள் உணவும், மதுவும் பரிமாற அங்கே கூட்டம் சும்மா அள்ளுகிறது.

இதனால் கவர்ச்சி ஹோட்டல்களை நாடு முழுவதும் திறக்க ஆரம்பித்துள்ளனர் ‘ட்வின் பீக்ஸ்' ஹோட்டல் உரிமையாளர்கள்.

போட்டியில் வெல்ல வேண்டுமே..

போட்டியில் வெல்ல வேண்டுமே..

போட்டிமயமான உலகில் தங்களின் இருப்பை தக்கவைத்துக் கொள்ள ஏதாவது செய்தாக வேண்டுமே என்று யோசித்ததன் விளைவுதான் இந்த செக்ஸி பெண்கள் பரிமாறும் உணவகம் உதயமானது. இன்றைக்கு பில்லியன் டாலர் கொட்டும் தொழிலாக உயர்ந்துள்ளது.

ட்வின் பீக் பெண்கள்..

ட்வின் பீக் பெண்கள்..

பணிபுரிவர்களுக்கு என்று ஒரு ட்ரஸ் கோட் இருக்கும். இந்த ட்வீன் பீக் பெண்களுக்கு உள்ள ட்ரஸ்கோட் முக்கால்வாசி மார்பகம் வெளியே தெரியும் வகையில் ஆடை அணிவதுதான். இவர்கள் வயிற்றுப் பசிக்கு விருந்தளிக்கின்றனரோ இல்லையோ, வாடிக்கையாளர்களின் கண்களுக்கு விருந்தளிக்கின்றனர்.

வார்த்தைகளில் ஜாலம்

வார்த்தைகளில் ஜாலம்

இவர்களை காணவரும் வாடிக்கையாளர்களிடம் எப்படி பேச வேண்டும் என்பது முதற்கொண்டு பயிற்சி அளிக்கின்றனர். இவர்களின் நடை, உடை, பாவனைகள் எல்லாமே வாடிக்கையாளர்களிடம் கவரும் வகையில் அமைந்துள்ளது.

நாடு முழுவதும் 31 ஹோட்டல்கள்

நாடு முழுவதும் 31 ஹோட்டல்கள்

கவர்ச்சிப் பெண்மணிகளை சர்வீஸ் செய்ய போட்டது வீண் போகவில்லை 2008ம் ஆண்டு 7 இடங்களில் மட்டுமே தொடங்கப்பட்ட ட்வின் பீக்ஸ் ஹோட்டல் தற்போது 31 இடங்களில் திறக்கப்பட்டுள்ளது.

கனடாவிலும் திறக்கத் திட்டம்

கனடாவிலும் திறக்கத் திட்டம்

இதேபோன்ற கவர்ச்சிகரமான ப்ரஸ்டாரெண்ட்களை கனடாவிலும் திறக்க திட்டமிட்டுள்ளது ட்வின் பீக்ஸ். இதற்காக ப்ரான்சீஸ்களை தேடி வருகின்றனராம்.

கனடாவில் பெண் சப்ளையர்கள்

கனடாவில் பெண் சப்ளையர்கள்

2006ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி பார்களில் பணிபுரியும் பெண்கள் 77.6 சதவிகிதமாக இருந்தது. அந்நாட்டில் 15 முதல் 44 வயது வரை உடைய பெண்கள் சப்ளையர்களாக பணி புரிந்தனர். அவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 9 டாலர்கள் சம்பளம். மினி ஸ்கர்ட் தான் அவர்களின் ட்ரஸ்கோட்.

பாலியல் வன்முறைகள்

பாலியல் வன்முறைகள்

பார்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் பேச்சு, செய்கைகள் தொந்தரவு தரக்கூடியதாகத்தான் இருக்கிறது. வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாது உடன் பணிபுரியும் ஆண்களிடம் இருந்தும் தொந்தரவுகள் வந்துள்ளன என்கின்றனர் பாதிக்கப்பட்ட பெண் சப்ளையர்கள்.

சாப்பிடுங்கள், பருகுங்கள் அனுபவியுங்கள்

சாப்பிடுங்கள், பருகுங்கள் அனுபவியுங்கள்

ஆனால் இன்றைக்குள்ள ப்ரஸ்டாரென்ட் ஹோட்டல்களான ட்வின் பீக்ஸ் தாரக மந்திரமே "சாப்பிடுங்கள், பருகுங்கள், கண்கவர் காட்சிகளை அனுபவியுங்கள்" என்பதாகத்தான் இருக்கிறதாம்.

காலண்டர்களை வெளியிட்ட ட்வின் பீக்ஸ்

காலண்டர்களை வெளியிட்ட ட்வின் பீக்ஸ்

தங்கள் நிறுவனத்தைப் பற்றி விளம்பரம் செய்ய கவர்ச்சி உடை கன்னியர்களைக் கொண்ட காலண்டர்களை கூட வெளியிட்டுள்ளது ட்வின் பீக்ஸ். என்னதான் கவர்ச்சி உடை அணிந்து சப்ளை செய்ய விட்டாலும் பணிபுரியும் பெண்களிடம், வாடிக்கையாளர்கள் யாரும் பாலியல் ரீதியான தொந்தரவுகள் தருவதை நிறுவனத்தினர் அனுமதிப்பதில்லையாம்.

சேல்ஸ் சும்மா அள்ளுதாம்

சேல்ஸ் சும்மா அள்ளுதாம்

கவர்ச்சி உடை டெக்னிக்கை பயன்படுத்தி அமெரிக்காவில் புற்றீசல் போல ப்ரஸ்டாரென்டுகள் முளைத்துள்ளன. அங்கே சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பில் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாம்.

ஐரோப்பாவிலும் ப்ரஸ்டாரென்ட்கள்

ஐரோப்பாவிலும் ப்ரஸ்டாரென்ட்கள்

இந்த கான்செப்டில் இப்போது ஐரோப்பாவிலும் கடைகள் முளைக்க ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள்தான் இதுபோன்ற சங்கிலித்தொடர் ப்ரான்சிஸ்களை நிறுவ ஆரம்பித்துள்ளதாம்.

பாலியல் வழக்குகள் அதிகம்

பாலியல் வழக்குகள் அதிகம்

பிற நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களை விட இதுபோன்ற ரெஸ்டாரென்ட்களில் பணிபுரியும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் 5 மடங்கு அதிகமாக பதிவாகியுள்ளதாம். என்னதான் நாங்கள் கவர்ச்சியாக உடை அணிந்தாலும், எங்களை சக மனிதர்களாக பாருங்கள் என்று ஆதங்கப்படுகின்றனர் இங்கு பணிபுரியும் பெண்கள்.

English summary
Wind peaks restaurant chain their tagline is eats drinks scenic views -- growing franchise. And it's part of a recent boom of business is attracting diners who are hungry for a meal. And then ample supply of scantily clad women. The restaurants are officially at war. As many food franchises are fighting to stay afloat. It's a post recession blew through these establishments. Restaurants with the added sex appeal. More than a billion dollar industry. Spending mainly because they're dishing out quite a bit more.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X