பந்து வீச்சாளர் பிரவீண் குமார் வீட்டில் வைத்து ஆபாசப் படம் எடுத்த உறவினர் கைது
லக்னோ: கிரிக்கெட் பந்து வீச்சாளர் பிரவீண் குமாருக்குச் சொந்தமான வீட்டில் தங்கியிருந்த அவரது உறவினர், கல்லூரிப் பெண்களை அழைத்து வந்து ஆபாசப் படம் எடுத்து அவர்களை மிரட்டியதாக சர்ச்சை வெடித்துள்ளது. இதையடுத்து வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். மேலும் உறவினரையும் கைது செய்தனர்.
பிரவீண்குமாரின் வீடு உத்தரபிரதேசம் மாநிலம் மீரட் நகரில் உள்ளது. இங்கு பிரவீண்குமாரின் உறவினர் புனீத் சவுத்திரி என்பவர் தங்கியுள்ளார்.
கடந்த 31-ந் தேதி இந்த குடியிருப்பில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. புனித்தின் நண்பர்கள் குன்வர்பால், சஞ்சய் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் தங்களுடன் வேளாண் கல்லூரி மாணவிகள் 2 பேரையும் விருந்து அழைத்து வந்திருந்தனர். அப்போது 2 மாணவிகளையும் அவர்கள் ஆபாச படம் எடுத்தனர்.
பின்னர் அந்த பெண்களின் ஆபாச படத்தை காட்டி இருவரையும் பணம் கேட்டு ரூ. 1 கோடிக்கு செக்கில் கட்டாயப்படுத்தி கையெழுத்து போடும்படியும் மிரட்டினார்கள். இதையடுத்து பாதிக்கப்பட்ட 2 மாணவிகளும் போலீசில் புகார் செய்தனர்.
இது தொடர்பாக மீரட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் இன்று பிரவீண்குமாருக்கு சொந்தமான குடியிருப்பில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இங்கு தான் 2 பெண்களையும் ஆபாச படம் எடுத்தனர் என்பதால் சோதனை நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
சோதனைக்குப் பின்னர் புனீத் மீது கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.
பிரவீண்குமாரின் சகோதரர் வினய்குமார் கூறுகையில், பிரவீண்குமார் இந்த குடியிருப்பை புனீத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பு வாடடைக்கு விட்டிருந்தார். எனவே அங்கு நடந்த சம்பவத்துக்கும் பிரவீண்குமாருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார் அவர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications