For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிகரெட் விலை கிடுகிடு உயர்வு.. தம்மடிப்போர் காதுகளில் புகை!

Google Oneindia Tamil News

சென்னை: ஐடிசி நிறுவனம் தனதுதயாரிப்பு சிகரெட்களின் விலையை உயர்த்தியுள்ளது.

பட்ஜெட்டில் எப்போதுமே சிகரெட்டுக்கான வரியை நிச்சயம் ஏற்றுவார்கள். இதனால் சிகரெட் ஆண்டுதோறும் மற்றும் ஆண்டில் சில முறை உயர்ந்து வருகிறது.

அந்த வகையில் தற்போது ஐடிசி தயாரிப்பு சிகரெட்களின் விலை உயர்ந்துள்ளது.

14 முதல் 18 சதவீதம் வரை

14 முதல் 18 சதவீதம் வரை

ஐடிசி நிறுவனம்தான் இந்தியாவிலேயே அதிக அளவில் சிகரெட்களை தயாரித்து விற்கிறது. இந்த நிறுவனத்தின் சிகரெட் விலை 14 முதல் 18 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

பட்ஜெட் வரி உயர்வால்

பட்ஜெட் வரி உயர்வால்

பட்ஜெட்டில் சிகரெட் மீதான எக்ஸைஸ் வரி அதிகரிக்கப்பட்டதால் இந்த விலை உயர்வு என ஐடிசி கூறுகிறது.

எந்தெந்த பிராண்டுக்கு விலை உயர்ந்துள்ளது

எந்தெந்த பிராண்டுக்கு விலை உயர்ந்துள்ளது

கோல்ட் பிளேக்,, கிளாசிக் மைல்ட்ஸ், வில்ஸ் நேவி கட், இந்தியா கிங்ஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்தியுள்ளது ஐடிசி. ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளதாம்.

ஏற்கனவே ஏற்றிய கடைக்காரர்கள்

ஏற்கனவே ஏற்றிய கடைக்காரர்கள்

ஆனால் சிகரெட் விலையை பட்ஜெட் அறிவிப்பு வந்தவுடனேயே பல கடைக்காரர்கள் ஏற்றி விட்டனர். உதாரமத்திற்கு கிங்ஸ் சிகரெட்டின் விலை ஒவ்வொரு பகுதியிலும் ஒரு விதமாக உள்ளாம். அதிகபட்சமாக 8 ரூபாய்க்கு விற்கிறார்களாம்.

இன்னும் நல்லா விலையை ஏத்துங்க முதலாளி.. அப்பத்தான் தம்மடிப்போர் திருந்த வாய்ப்பு கிடைக்கும்!

English summary
ITC, the country’s largest cigarette maker, has raised prices of its cigarettes 14-18%, in line with market expectations. This is on the back of an 18% increase in excise duty on 65mm cigarettes as part of the 2013-14 Budget. Coupled with the hike in value-added tax or VAT across states, the increase in levies works out to around 350 basis points. This made the price hikes inevitable, said analysts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X