தமிழக அரசின் இலவச லேப்டாப்பை பயன்படுத்தும் லண்டனில் படிக்கும் மாணவி- அமைச்சர் 'ஆனந்தக் கண்ணீர்'
சென்னை: தனியார் பொறியியல் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக நிரூபிக்கப்பட்டால், அக்கல்லூரி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டசபையில் உயர் கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று உயர்கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தேமுதிக உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்தீபன் பேசியதாவது:
தமிழ்நாட்டில் படித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இந்நிலையில் தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட வரமுறை இல்லாமல் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். அந்த கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். துகுறித்து பெற்றோர் புகார் தெரிவித்தால் சம்மந்தப்பட்ட மாணவரை கல்வி நிர்வாகம் பழிவாங்கி மிரட்டுகிறது' , என்றார்.
அப்போது உயர் கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் குறுக்கீட்டு அளித்த பதிலில்,
உறுப்பினர் ஆதாரத்துடன் கூறினால் அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும். இதுவரை அப்படி புகார் எதுவும் வரவில்லை. பொத்தாம் பொதுவாக உறுப்பினர் கூறக்கூடாது.
கட்டாய நன்கொடை வசூலிக்க தடை செய்யும் சட்டம் 1992-ம் ஆண்டு புரட்சிதலைவி ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டு 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கிறது, ‘ என்றார்.
மேலும், இலவச மடிக்கணினி பற்றிய கேள்விக்கு பதிலளிக்கு அளித்த பதிலில், 'இலவச லேப்டாப் திட்டம் ஒரு உன்னத திட்டம். இந்தியாவே பாராட்டும் திட்டம். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் லண்டன் சென்று இருந்தபோது அங்கு பழமை வாய்ந்த கல்லூரியில் எம்.பி.ஏ. படிக்கும் நரீனா என்ற மாணவி புரட்சி தலைவி அம்மா திட்டத்தில் கிடைத்த மடிக்கணிணியைத் தான் நான் இங்கு பயன்படுத்திக் கொண்டு இருக்கிறேன் என்று பெருமையுடன் கூறினார். இதைக் கேட்டதும் எனக்கு ஆனந்தக் கண்ணீர் வந்தது என்றார் அமைச்சர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications