For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எருமை மீது சவாரி செய்ற எமன் மோடி: காங்.! தோல்வி பயத்தில் தரமின்றி பேசுகிறது காங்: பாஜக!!

By Mathi
Google Oneindia Tamil News

BJP Leaders
டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை எருமை மீது சவாரி செய்கிற எமதர்ம ராஜா என்று மிகக் கடுமையாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இந்த விமர்சனத்துக்கு பாரதிய ஜனதா கட்சியும் பதிலடி கொடுத்திருக்கிறது.

டெல்லியில் நடைபெற்ற தொழில் கூட்டமைப்புக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் நாட்டின் வளர்ச்சிக்கு சிலர் தடையாக இருக்கின்றனர் என்று மறைமுகமா மோடியைத் தாக்கிப் பேசினார். இதனால் ராகுல் காந்தியை பாஜக விமர்சனம் செய்தது. இதைத் தொடர்ந்து தற்போது நரேந்திர மோடியை மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறது காங்கிரஸ் கட்சி.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரஷித் ஆல்லி கருத்து தெரிவிக்கையில், நரேந்திரமோடியை ராகுல் காந்தியுடன் ஒப்பிட முடியாது. நரேந்திர மோடி வெள்ளைக் குதிரையில் சவாரி செய்கிறவர் அல்ல .... எருமை மீது சவாரி செய்கிற எமதர்ம ராஜா என்றார். மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் மணீஷ் திவாரி கூறுகையில், குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த படுகொலைகள் போல் நாடு முழுவதும் நடக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார் என்று கருதுவதாகத் தெரிவித்தார்..

காங்கிரசின் இந்த கடுமையான விமர்சனத்துக்கு பாரதிய ஜனதா கட்சி பதிலடி கொடுத்திருக்கிறது. பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான நிர்மலா சீத்தாரமன் கூறுகையில், காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி பயம் வந்து விட்டது. இதனால் தரம் தாழ்ந்த வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்கிறது. மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி நிலையற்ற தன்மையில் இருக்கிறது. இதில் இருந்து மற்றவர்கள் கவனத்தை திசை திருப்பவே இது போன்ற தரம் தாழ்ந்த விமர்சனங்களில் ஈடுபடுகிறது என்றார்.

The Congress on Friday retaliated against the BJP's digs at Rahul Gandhi's CII speech by likening Narendra Modi to "Yamraj" (lord of death), ratcheting up the war of words over the Gujarat CM who is likely to emerge as the saffron party's PM candidate in 2014

English summary
The Congress on Friday retaliated against the BJP's digs at Rahul Gandhi's CII speech by likening Narendra Modi to "Yamraj" (lord of death), ratcheting up the war of words over the Gujarat CM who is likely to emerge as the saffron party's PM candidate in 2014
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X