புதுச்சேரியிலும் 'சரக்கு கடைகளை' மூடுங்க! - திருமா
புதுவை: புதுச்சேரியில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளையும் இழுத்து மூடாவிட்டால் போராட்டம் வெடிக்கும் என எச்சரித்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.
புதுவை மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் ராம் இண்டர்நேஷனல் ஓட்டலில் நடந்தது. கூட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதுவை மாநில அமைப்பு செயலாளர் பாவாணன் தலைமை தாங்கினார்.
பொது செயலாளர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் நிருபர்களைச் சந்தித்த போது, "ஈழத் தமிழர்களின் நலன்களை பாதுகாத்திடவும், தனி தமிழ் ஈழத்திற்கு ஆதரவு திரட்ட தொடர்ந்து போராட்டங்கள் நடத்தவும் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களை சார்ந்த மக்கள் ஒன்றாக திரண்டு ஒற்றுமையாக போராட வேண்டும்.
சி.பி.எஸ்.சி. பாடத்திட்டம் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கல்வி உரிமை சட்டப்படி 25 சதவீதம் ஏழை எளிய தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
புதுவை அரசு தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
மதுக்கடைகளை மூடவேண்டும்
புதுச்சேரியில் உள்ள மதுபான கடைகளால் இளைஞர்கள் குடிபோதைக்கு அடிமையாகி பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதனால் அவர்களது குடும்பம் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே புதுவையில் உள்ள மதுபான கடைகளை மூட வேண்டும். மதுபான கடைகளை மூடாவிட்டால் பல்வேறு போராட்டங்கள் வெடிக்கும்.
தமிழகத்தின் பல பகுதிக்கும் கூட இங்கிருந்து கள்ளத்தனமாக மது போகிறது. அதையெல்லாம் தடுக்க அனைத்து மதுக்கடைகளையும் ஒழிக்க வேண்டும்," என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications