துபாயில் நேற்று முதல் வெளுத்து வாங்கும் மழை.. மக்கள் செம குஷி!
துபாய்: வளைகுடா நாடுகளான துபாய், அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த மழையால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்ட போதிலும், வெப்பத்தின் தாக்கம் வெகுவாக குறைந்திருப்பதால் மக்கள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பல்வேறு பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

சனிக்கிழமை மாலை முதல்
துபாய், ஷார்ஜா, அபுதாபி மற்றும் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சனிக்கிழமை மாலை மழை கொட்டத் தொடங்கியது.

பலத்த காற்று -இடி மின்னல்
இப்பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

காற்றில் பறந்த விளம்பர பதாகைகள்
பலத்த காற்றின் காரணமாக விளம்பரப் பதாகைகள் ரோட்டின் மீது வந்து விழுந்து போக்குவரத்துக்கு இடையூறாக மாறியது.

மக்களுக்கு மகிழ்ச்சிதான்
எதிர்பாராதவிதமாக பெய்த மழை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினாலும் மக்களுக்கு பெரிதும் மகிழ்வினை ஏற்படுத்தியது.

இன்றும் பெய்யும் மழை
இன்று ஞாயிற்றுக்கிழமையும் காலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் சூரியன் சுருங்கிப் போய் மாலை வந்து விட்டதோ என்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது.
இதமான காலநிலை நிலவுதால் மக்கள் பெரிதும் மகிழ்வடைந்துள்ளனர்.
மழையின் காரணமாக ஆங்காங்கே சிறு சிறு விபத்துகளும் ஏற்பட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications