3-வது தொகுதியில் வேட்புமனு ஏற்கப்பட்டது- மகிழ்ச்சியில் முஷரப்

Subscribe to Oneindia Tamil

Musharraf
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் இரண்டாவது முறையாக கராச்சி தொகுதியிலும் முன்னாள் அதிபர் முஷாரப்பின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மூன்றாவதாக சித்ரால் தொகுதியில் வேட்புமனு ஏற்கப்பட்டது.

பாகிஸ்தான் பார்லிமென்டிற்கு மே 11-ம் தேதி பொதுத்தேர்தல் நடக்கிறது. இதில் முன்னாள் அதிபர் முஷாரப் போட்டியிட முடிவு செய்தார். இதற்காக கடந்த 2008-ம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறிய முஷரப் கடந்த மாதம் தாய்நாடு திரும்பினார்.

நாலுல போட்டி:

அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் கட்சி சார்பில், கராச்சி, கசூர், இஸ்லாமாபாத், சித்ரால் உள்ளிட்ட நான்கு தொகுதிகளல் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தள்ளுபடி:

கடந்த வெள்ளியன்று கசூர் தொகுதியில் வேட்பு மனு தள்ளுபடியானது. இதையடுத்து கராச்சி தொகுதியிலும் இவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்தார்.

புகார்:
கடந்த 2007-ம் ஆண்டு பாகிஸ்தானின் அவசரநிலையை பிரகடனப்படுத்தியதன் மூலம் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மூன்று முறை மீறினார் என ஜமாத்-இ- இஸ்மாயில் தலைவர் ஒருவர் புகார் மனு அளித்திருந்தார். இதையடுத்து அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்றாவது தொகுதியில் ஏற்பு:

இந்நிலையில் கைபர் பக்துன்வாலா மாகாணத்தில் சித்ரால் தொகுதியில் அவரது வேட்புமனு‌ ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கொஞ்சம் நிம்மதி:

இதனால் முஷாரப்பிற்கு சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு தொகுதியில் இவரது வேட்பு மனு தாக்கல் குறித்த நிலவரம் தெரியவில்லை. இதற்கிடையே முஷாரப் மீதான வழக்கின் விசா‌ரணை நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+