அணையில் தண்ணி இல்லாட்டி சிறுநீரா கழித்து விட முடியும்.. அஜீத் பவாரின் திமிர்ப் பேச்சு

Subscribe to Oneindia Tamil

Ajit Pawar
புனே: அரசியல்வாதி என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாம். அந்த வாய் பேசுவதை நாமெல்லாம் கேட்டாக வேண்டும். எதிர்த்துப் பேசக் கூடாது, பேசவும் முடியாது.. இப்படிப்பட்ட அவலமான இந்திய அரசியல்வாதிகள் மத்தியில் மக்களை மிக மிக கேவலமாக சித்தரித்தும், விமர்சித்தும் அசிங்கமான கமெண்ட் அடித்துள்ளார் சரத்பவாரின் உறவினரும், மகாராஷ்டிர மாநில துணை முதல்வருமான அஜீத் பவார்.

அணையில் தண்ணீர் இல்லை. அதற்காக சிறுநீரையா கழித்து விட முடியும் என்று மகா கேவலமான பேச்சை வெளிப்படுத்தியுள்ளார் இந்த அரசியல்வாதி. மகாராஷ்டிர மாநில மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் பவாரின் பேச்சு மிக மிக அவதூறானதாகும். இப்படிப்பட்ட மோசமான அரசியல்வாதிகளுக்கு மத்தியில்தான் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பது மிகவும் அதிர்ச்சிகரமானது.

மகாராஷ்டிராவில் கடும் வறட்சி நிலவுகிறது, குடிநீர், விவசாய பாசன நீர் என தண்ணீருக்குப் பெரும் பஞ்சமாக உள்ளது. கடந்த 2 மாதமாக மாநிலத்தின் பல பகுதிகளில் விவசாயிகள் தொடர்ந்து பாசனத்திற்கு நீர் கோரி போராட்டங்களில் குதித்துள்ளனர். அதைக் கேலி செய்யும் வகையில்தான் இப்படித் திமிராக பேசியுள்ளார் அஜீத் பவார்.

புனேயில் நடந்த ஒரு கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு அஜீத் பவார் பேசுகையில், சோலாபூரைச் சேர்ந்த ஒரு விவசாயி 55 நாட்களாக அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக் கூறி உண்ணாவிரதம் இருக்கிறார். ஆனால் அணையில் தான் தண்ணீர் இல்லையே, வேறு எங்கு போவது... சிறுநீரையா கழித்து விட முடியும்.. குடிக்கக் கூட தண்ணீர் இல்லை, இதனால் சிறுநீர் கூட சரியாக வர மாட்டேன் என்கிறது என்று பேசியுள்ளார் பவார்.

பவாரின் பேச்சு மகாராஷ்டிர மாநில விவசாயிகளை பெரும் அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ளது. அனைவரும் கொந்தளித்துப் போயுள்ளனர். இதையடுத்து உடனடியாக மன்னிப்பு கேட்டுள்ளார் பவார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாராஷ்டிர மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வறட்சியால் பாதித்த பகுதி மக்களை புண்படுத்த நான் பேசவில்லை என்று கூறியுள்ளார் அஜீத் பவார்.

இன்னொரு திமிர்ப் பேச்சு

அதேபோல மின்சார பற்றாக்குறை குறித்தும் திமிராகப் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே போவதால்தான் மின்சாரப் பற்றாக்குறை ஏற்படுகிறது என்று கூறியுள்ளார்.

இப்படியெல்லாம் பேசிய அவர் கடைசியாக ஒரு வார்த்தையைக் கூறினார். அதைக் கேட்டு கூட்டமே சிரித்தது....

அவர் சொன்னது இதுதான்.. "நான் தண்ணி அடித்து விட்டு பேசுவதாக நீங்கள் நினைக்கக் கூடும்"

இந்த வார்த்தை உண்மையாகத்தான் இருக்க வேண்டும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+