மலாலாநிதி’க்கு நிதியுதவி செய்த ஏஞ்சலினா

பாகிஸ்தானில் பெண் கல்விக்காக குரல் கொடுத்த மலாலாவை தலிபான்கள் சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவருக்கு இங்கிலாந்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் இங்கிலாந்தில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் ‘மலாலா நிதி' ஒன்றை தொடங்கி உள்ளார். இதில், ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியுடன் இணைந்து பாகிஸ்தானின் சுவாட் பள்ளத்தாக்கு பகுதியில் பெண்கள் பள்ளி ஒன்றை தொடங்கப் போவதாக மலாலா கூறியுள்ளார். இந்நிதியைக் கொண்டு கட்டப்படும் பள்ளியில் 5 வயதிலிருந்து 12 வயது வரை உள்ள 40 சிறுமிகளுக்கு கல்வி வழங்க முடியும் என்றும் மலாலா தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஜோலி, மலாலா நிதிக்கு 2 லட்சம் டாலர்களை (ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய்) வழங்க உள்ளதாக அறிவித்தார். முன்னதாக இவர், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான கல்வி அறக்கட்டளை' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications