பலே வெள்ளையத்தேவா...கடத்துனா காட்டிக் கொடுக்குற கைச்சங்கிலி @ பிரேஸ்லெட்...!

Subscribe to Oneindia Tamil

ஸ்டாக்ஹோம்: கடத்தப்பட்டால் அடுத்த விநாடியே ஸ்பாட்டை காட்டிக்கொடுக்கும் பிரேஸ்லெட்டைக் கண்டு பிடித்திருக்கிறார்கள் ஸ்வீடனின், ஸ்டாக்ஹோமில் உள்ள மனித உரிமைப் பாதுகாப்பாளர்கள் என்ற தொண்டு நிறுவன அமைப்பினர்.

உலகின் பல்வேறு நாடுகளில் பொதுவாக சமூக சேவை செய்ய செல்பவர்கள் போராளிகளால் கடத்தப்படுவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழுகின்றன.

அதுபோன்ற சமயங்களில் அவர்களது இருப்பிடத்தை ஜிபிஎஸ் மூலம் தகவல் தெரிவிக்கக்கூடிய வண்ணம் செயல்படும் இந்த புதிய பிரேஸ்லெட்.

ஆரோக்கிய காப்பு...

ஆரோக்கிய காப்பு...

இந்த காப்பு போன்ற பிரேஸ்லெட், மொபைல் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி இணையதளத்துடனும் இதனைப் பயன்படுத்துவோரின் தலைமை அலுவலகத்துடனும் இணைக்கப்பட்டிருக்கும்.

ஆபத்துன்னா பிரேஸ்லெட்டை அழுத்து...

ஆபத்துன்னா பிரேஸ்லெட்டை அழுத்து...

ஏதேனும் ஆபத்து நேரிடும்போது இந்த காப்பினைக் கையால் இயக்குவதன் மூலம் அவர்கள் மற்றவர்களுக்குத் சிக்னல் தரமுடியும்.

ஜிபிஎஸ் இருக்கு...

ஜிபிஎஸ் இருக்கு...

இதில் ஜிபிஎஸ் இணைப்பும் இருப்பதால் ஆபத்தில் இருப்பவரின் இடத்தை மீட்புக் குழுவினர் உடனே அறிந்து கொள்ள எளிதாக இருக்கும்.

செச்னியாவின் நதாலியா நினைவாக...

செச்னியாவின் நதாலியா நினைவாக...

2009ஆம் ஆண்டு ரஷ்யாவின் செச்னியாவில் கடத்திக் கொலை செய்யப்பட்ட மனித உரிமை ஆர்வலர், நடாலியா எஸ்டிமிரோவா நினைவாக நடாலியா திட்டம் என்று இந்த காப்புக்குப் பெயரிடப்பட்டுள்ளது.

சேவைக்கு முதலிடம்...

சேவைக்கு முதலிடம்...

போர் பிரச்சினைகள் இருக்கும் இடங்களில், கடத்தல்கள் அதிகரிப்பதன் காரணமாக, அது போன்ற இடங்களில் சேவை செய்பவர்களுக்கு, முதலில், இந்த வகையான கை சங்கிலிகளை வழங்க மனித உரிமைக் குழு திட்டமிட்டுள்ளது.

நம்ம ஊர்லயும் நிறையப் பேரைக் கடத்துகிறார்கள். இங்கும் இந்த காப்பு வந்தால் பலருக்கு காவலர்கள் காப்பு மாட்ட வசதியாக இருக்கும்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+