சித்திரை விஷு..சபரிமலை கோவில் இன்று திறப்பு
பத்தனம்திட்டா சித்திரை விஷு திருநாளை ஒட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.
கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் கோவில் மேல்சாந்தி தாமோதரன் போற்றி நடையை மாலையில் திறந்து வைக்கிறார். பின்னர் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. நாளை 11-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
ஒவ்வொரு நாளும் சகஸ்ர கலசாபிஷேகம், களபாபிஷேகம், படி பூஜை மற்றும் புஷ்பாபிஷேகம் நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏப்ரல் 14-ந்தேதி சித்திரை விஷு அதாவது மலையாளப் புத்தாண்டு சிறப்பு பூஜை நடக்கிறது. அன்று அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை சித்திரை விஷு கனி காணும் தரிசனம் நடக்கிறது. அப்போது கோவில் தந்திரி மற்றும் மேல்சாந்தி கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு கை நீட்டமாக நாணயங்கள் வழங்குகிறார்.
18-ந்தேதியுடன் சித்திரை விஷு திருவிழா மற்றும் சிறப்பு பூஜைகள் நிறைவடைகிறது. அன்றிரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது.
தமிழ்ப் புத்தாண்டு தினமான சித்திரை முதல் நாள்தான் மலையாளப் புத்தாண்டும் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
