பைக் வாங்கிய கடனை அடைக்க 10 பவுன் நகையைத் தர மறுத்த பாட்டியை கொன்ற பேரன்
மதுரை: திருமங்கலம் அருகே பைக் வாங்கிய கடனை அடைக்க பாட்டியைக் கொன்று நகையை திருடிய பேரனை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் சிந்துபட்டி அருகே உள்ள நாவார்பட்டியைச் சேர்ந்தவர் தாயம்மாள்(65). அவர் தனது அக்கா பேரன் ஜெயராமனுடன் பைக்கில் சென்றார். பின்னர் புத்தூர் மலையடிவாரத்தில் அவர் பிணமாகக் கிடந்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ஜெயராமனை கைது செய்தனர்.
ஜெயராமன் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,
நான் சொக்கத்தேவன்பட்டி டாஸ்மாக் பாரில் வேலை பார்த்தேன். அப்போது பைக் வாங்க ஒருவரிடம் ரூ. 10,000 கடன் வாங்கினேன். அதில் ரூ.2,000 கொடுத்துவிட்டேன். ரூ. 8,000 பாக்கியை கொடுக்காவிட்டால் ஆடு, மாடுகளை கொடு என்று அவர் மிரட்டினார். கடனை அடைக்க பாட்டியை புத்தூர் மலையடிவாரத்திற்கு அழைத்துச் சென்று அவர் அணிந்திருந்த 10 பவுன் நகையை கொடுக்குமாறு கேட்டேன். ஆனால் பாட்டி தர மறுத்துவிட்டார். இதையடுத்து பாட்டியை கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்து நகையை எடுத்தேன் என்றார்.
ஜெயராமனிடம் இருந்து போலீசார் நகையை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications
