காணிக்கை முடி வைக்க இடமில்லை.... திணரும் திருப்பதி
நகரி: திருப்பதி கோவிலில் மலைபோல் குவிந்து கிடக்கும் பக்தர்களின் காணிக்கை முடியை இடப்பற்றாக்குறையால் குறைந்த ஏலத் தொகைக்கு விற்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்தி கடனாக தங்கள் தலை முடியை காணிக்கை செலுத்துகிறார்கள். சமீபத்தில் முடி காணிக்கை தருபவர்களுக்காக லட்டு தருவதாக அறிவித்த தேவஸ்தானம், பின் ஏனோ தன் முடிவை மாற்றிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

ரகம்...ரகமாப் பிரிச்சு...
இந்த முடியை ஏலம் விடுவதன் மூலம் கோவிலுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. பக்தர்கள் வழங்கும் காணிக்கை முடியை 5 ரகமாக பிரித்து ஏலம் விடப்படுகிறது.
31 அங்குலம் மற்றும் அதற்கு மேலான நீளம் கொண்ட முடி முதல் ரகமாக கருதப்படுகிறது. இதற்கு நல்ல கிராக்கி உள்ளது. 14 முதல் 30 அங்குலம் வரை நீளமுள்ள முடி 2-ம் ரகமாகவும், 10 முதல் 15 அங்குலம் வரை நீளமுள்ள முடி 3-வது ரகமாகவும், 5 முதல் 9 அங்குல நீளமுள்ள முடி 4-வது ரகமாகவும், 9 அங்குலத்துக்கு குறைவான நீளமுள்ள முடி 5-வது ரகமாகவும் பிரிக்கப்படுகிறது.

ஏலம்....
முதல் ரக முடி கிலோ ரூ. 20 ஆயிரம் குறைந்த பட்ச ஏலத் தொகையாக நிர்ணயிக்கப்படுகிறது. அதே நேரத்தில் 5-வது ரகம் கிலோ ரூ.80 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேங்கும் முடி...
5-வது ரக தலைமுடியை ஏலம் எடுக்க யாரும் முன் வராததால் 270 டன் முடி தேங்கி கிடக்குதாம். இதனை 70 லாரிகளில் நிரப்பலாமாம்.

முடி வைக்க இடமில்ல...
எனவே முடியை சேகரித்து வைக்க இடம் இல்லாமல் தேவஸ்தானம் திணறுகிறது. எனவே விலையை குறைத்து விற்க தேவஸ்தானம் திட்ட மிட்டு உள்ளது.

நஷ்டமில்ல...
கிலோ ரூ.40-க்கு விற்றால் கூட பெரிய இழப்பு ஏற்படாது என்று அதிகாரிகள் கருதுகிறார்கள். ஆனால் கோவில் ஆலோசகர் கிலோ ரூ.80-ல் இருந்து ரூ.70 ஆக குறைத்து விற்கலாம் என கருத்து கூறியுள்ளார். எப்படியாவது முடியை விற்று பாரத்தை குறைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாம்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications