சரணடையும் மாவோயிஸ்டுகளுக்கு உதவித்தொகை ரூ.2.5 லட்சமாக உயர்வு
டெல்லி: ‘சரண்' அடையும் மாவோயிஸ்டுகளை ஊக்குவிக்கும் வகையில், உதவித்தொகையை ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்து உள்ளது.
நெடுங்காலமாக வடமாநிலங்களில் அரசு நிர்வாகத்திற்கு எதிராக மாவோயிஸ்டு தீவிரவாதிகள் ஆயுத போராட்டம் நடத்திவருகின்றனர். அவர்களை ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வந்தாலும், சமீப காலமாக இந்த பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
ஏற்கனவே, தீவிரவாதத்தை கைவிட்டு, ஆயுதங்களுடன் சரண் அடையும் மாவோயிஸ்டுகளுக்கு அரசு உதவி தொகையும் மறுவாழ்வுக்கான வேலை வாய்ப்பும் வழங்கி வருகிறது.
உதவித்தொகை உயர்வு...
கடந்த சில வருடங்களாக, மாவோயிஸ்டுகள் யாரும் சரண் அடையாததால், அவர்களுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.
மாவோயிஸ்டு மறுவாழ்வு கொள்கை...
உள்ள மாவோயிஸ்டு மறுவாழ்வு கொள்கைப்படி, சரணடையும் ஒரு நக்சலைட்டுக்கு ரூ.1½ லட்சம் ரொக்கமும் மாத உதவி தொகையாக 2 ஆயிரம் ரூபாய் முதல் 3 ஆயிரத்து 500 வரை வழங்கப்பட்டது.
தலைவருக்கு அதிகம்...
தற்போது இந்த தொகை ரூ.2.5 லட்சம் ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. மாவோயிஸ்டு இயக்க தலைமை வகிப்பவருக்கு ரூ.2½ லட்சமும் துணை தலைமை மாவோயிஸ்டுக்கு 1.5 லட்சம் ரூபாயும் வழங்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
அக்கவுண்ட் வேணும்...
சரணடையும் மாவோயிஸ்டு பெயரில் அவருக்கு உரிய தொகை குறிப்பிட்ட வங்கியில் ‘டெபாசிட்' செய்யப்படும். 3 ஆண்டுகள் முடிந்த பின் அவர், அந்த தொகையை எடுத்துக் கொள்ள முடியும்.
வேலைவாய்ப்பு பயிற்சி...
இதுதவிர சரணடையும் மாவோயிஸ்டுக்கு, அவருக்கு தகுதி வாய்ந்த அவர் விருப்பப்படும் துறையில் வேலைவாய்ப்பு பயிற்சியும் தொடர்ந்து 3 வருடத்துக்கு மாதந்தோறும் ரூ.4,000 உதவி தொகையும் வழங்கப்படும்.
ஆயுதம் ஒப்படைத்தால் கூடுதல்...
புதிய திருத்தத்தின்படி ஆயுதங்களை ஒப்படைக்கும் மாவோயிஸ்டுக்கு கூடுதலாக 35,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. எந்திர துப்பாக்கியுடன் சரண் அடைபவருக்கு அதிகபட்சமாக ரூ.35,000மும், ஏ.கே.47 அல்லது ஏ.கே.56 ரக துப்பாக்கி ஒப்படைப்பவருக்கு ரூ.25,000மும் கைத்துப்பாக்கியை ஒப்படைப்பவருக்கு 10,000 ரூபாயும் வழங்க மத்திய அரசு புதிய முடிவை எடுத்து உள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications