இலங்கைக்கான நிதியுதவியை 20% குறைக்கும் அமெரிக்கா
வாஷிங்டன்: இலங்கைக்கு அளித்து வரும் நிதியுதவில் 20 சதவீதத்தை குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
அதேசமயம் மாலத்தீவுக்கான நிதி உதவியை அதிகரித்துள்ளது. இதற்கான பரிந்துரையை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான்கெர்ரி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்பித்துள்ளார்.
இலங்கையின் வடகிழக்கு பகுதியில் போரால் இடம்பெயர்ந்த மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த அமெரிக்கா முயற்சி மேற்கொண்டபோதிலும், அதற்கு பலன் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.அங்கு செயல்படுத்தப்படும் திட்டங்களில் ராணுவத்தின் தலையீடு அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதனால், அடுத்தாண்டு இலங்கைக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டிருந்த 8 பில்லியன் டாலர் நிதியுதவி, 6 பில்லியன் டாலராக குறைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்த பிறகும் மனித உரிமை மீறல் அதிகரித்து வருவதாலும், மறுசீரமைப்பு மற்றும் அரசியல் நடவடிக்கைகள் மேம்படுத்தப்படாததாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு அமெரிக்கா அளித்து வரும் நிதியுதவியில் பெருமளவு, நிதித்துறை சீர்திருத்தங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வங்காள தேசத்திற்கும் இந்த ஆண்டிற்கான நிதி உதவியைக் குறைத்துள்ள கெர்ரி, மாலத்தீவுகளுக்கு அதிகரிக்கும்படி அரசிடம் பரிந்துரைத்துள்ளார்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications