கூட்டுறவு சங்க தேர்தல்: அதிமுக - சிஐடியு மோதலில் 13 பேர் காயம்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலில், அ.தி.மு.க., வின் அண்ணா தொழிற்சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு., (மார்க்சிஸ்ட்) சங்கத்தினர் மோதிக் கொண்டதில் 13 பேருக்கு காயம் ஏற்பட்டது.
கற்கள், கம்பிகள் மூலம் இருதரப்பும் கடுமையாக தாக்கிக் கொண்டதில் 13 பேருக்கு காயம் ஏற்பட்டது.
திண்டுக்கல் நாகல்நகர், அரசு போக்குவரத்துக்கழக பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில், 2631 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், இயக்குனராக, 11 பேரை தேர்வு செய்ய, நேற்று, மனுக்கள் பெறப்பட்டன.
யார் முதலில் மனு தாக்கல் செய்வது என்பதில் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பும், இரும்புக் கம்பி, சோடா பாட்டில், சேர்களை வீசி தாக்கிக்கொண்டனர்.
தகராறில் ஈடுபட்டவர்களை, ஜெயச்சந்திரன் எஸ்.பி., தலைமையிலான போலீசார் விரட்டினர். மோதலில், அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த அன்வர், முகம்மது அலி, அபிமன்யு, மணிகண்டன், மாசானம், ராஜாங்கம், சி.ஐ.டி.யு, சங்க பொருளாளர் மணிகண்டன், முத்துச்சாமி, சதீஷ்குமார், ஜெயக்குமார், சின்னத்துரை, மணிகண்டன், ராஜா காயம் அடைந்து, அரசு மருத்துவமனையில் உள்ளனர்.
தேனி மாவட்டத்தில் காமயகவுண்டன்பட்டி கூட்டுறவு சங்க தேர்தலில் அதிமுகவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் வேட்பு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே பட்டமங்களத்தில் நடந்த கூட்டுறவு சங்க தேர்தலில் அதிமுகவினருக்குள்ளேயே கடும் மோதல் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி கலைக்க வேண்டி வந்தது.
-
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications