For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெங்களூரில் இதுவரை நடந்த குண்டுவெடிப்புகள்

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூர் மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக அலுவலகம் அருகே நேற்று காலை குண்டு வெடித்து 16 பேர் காயமடைந்துள்ளனர்.

2008ல் 7 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு

2008ல் 7 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு

2008ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி பெங்களூரில் அடுத்தடுத்து 7 இடங்களில் குண்டுகள் வெடித்தன. மடிவாலா பஸ் டிப்போ, மைசூர் ரோடு, அடுகோடி, கோரமங்கலா, விட்டல் மல்லையா ரோடு, லாங்போர்டு ரோடு மற்றும் ரிச்மண்ட் டவுன் ஆகிய இடங்களில் குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில் 2 பேர் பலியாகினர், 20 பேர் காயம் அடைந்தனர்.

2010ல் இரு குண்டு வெடிப்புகள்

2010ல் இரு குண்டு வெடிப்புகள்

2010ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி மாலை 4 மணிக்கு துவங்கவிருந்தது. இந்நிலையில் மதியம் 3.15 மணிக்கு சின்னசாமி ஸ்டேடியத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் போர்டு பின்னால் இருந்த குண்டு வெடித்தது. இதையடுத்து ஸ்டேடியம் அருகே மீண்டும் ஒரு குண்டு வெடித்தது. இதில் 4 போலீசார், ஒரு தனியார் நிறுவனர் செக்யூரிட்டி மற்றும் 10 பேர் காயம் அடைந்தனர்.

நேற்று பாஜக அலுவலகம் அருகே குண்டுவெடிப்பு

நேற்று பாஜக அலுவலகம் அருகே குண்டுவெடிப்பு

நேற்று மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக அலுவலகம் அருகே குண்டு வெடித்தது. இதில் 16 பேர் காயம் அடைந்தனர்.

English summary
Twin blasts rocked Bangalore today. Above is a list of the explosions that rocked the IT capital so far.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X