வெயிலூரில் (வேலூர்) வெளுத்துக்கட்டும் வெயில்
வேலூர்: வேலூரில் 107.6 டிகிரி வெயிலும் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் பெரும் அவதியில் உள்ளனர்.
வேலூரில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மார்ச் மாதத்தின் கடைசி நான்கைந்து நாட்கள் வேலூரில் வெயில் சராசாரியாக 100 டிகிரியைத் தொட்டது. இந்த மாத்தின் (ஏப்ரல்) தொடக்கம் முதலே தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது.
கடந்த 7ம்தேதி 103.6 டிகிரி வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் நேற்று வெயிலின் தாக்கம் அதிகரித்தது. நேற்று 107.6 டிகிரி வெயில் கொளுத்தியது. இது இந்த அண்டின் அதிகபட்ச வெயிலாகும்.

அதிக பாதிப்பு..
கடுமையான வெயிலால் அலுவலகம் செல்வோர், பள்ளி மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள், பஸ் பயணம் செய்வோர், முதியோர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனல் காத்து வீசுதே...
இரவு ரூ.10 மணி வரை ரோட்டில் அனல் காற்று வீசியது. இதனால் சாலையில் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

வெறும் அனல் காத்து தான் வருது...
வீடுகளில் மின் விசிறியிலிருந்து அனல் காற்றுதான் வருகிறதாம். இதனால் தூங்க முடியாமல் அவதிபடுகின்றனர். பொதுமக்கள் அதிகம் வெளியில் செல்லாததால் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

அக்னியில என்னவாகுமோ...
அடுத்த மாதம் (மே) 4-ந்தேதி தொடங்கி மே 28-ந்தேதி வரை அக்னி நட்சத்திரம் பொதுவாக இந்த நாட்களில் தான் வெயில் கொடுமை கடுமையாக இருக்கும். ஆனால் வேலூரில் இப்போதே உச்சகட்ட வெயில் அடிப்பதால் யாருமே பகல் நேரத்தில் தலைகாட்ட முடிவதில்லை.

அச்சத்தின் பிடியில்...
இதே நிலை நீடித்தால் வேலூரில் அக்னி நட்சத்திர காலத்தில் 110 டிகிரிக்கும் மேல் வெயில் அடிக்கும் என்று தெரிகிறது. இதனை நினைத்து பொதுமக்கள் இப்போது அச்சத்தில் உறைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications