வக்கீல் சங்கரசுப்பு மகன் கொலை வழக்கில் துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு: சி.பி.ஐ. அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சங்கரசுப்பு மகன் கொலை வழக்கில் துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு என சி.பி.ஐ. அறிவித்துள்ளது.

சென்னை அண்ணாநகர் தங்கம் காலனியில் வசித்து வரும் வக்கீல் சங்கரசுப்புவின் மகன் சதீஷ்குமார் கடந்த 2011-ம்ஆண்டு ஜூன் மாதம் 13-ந்தேதி ஐ.சி.எப். பகுதியில் குளத்தில் பிணமாக மிதந்தார்.

திருமங்கலம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சதிஷ்குமாரின கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் இருந்தது பிரேத பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் துப்பு கொடுப்பவர் களுக்கு வெகுமதி அளிக்கப்படும் என்று நேற்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி சி.பி.ஐ. சூப்பிரண்டு மணியிடம் கேட்டபோது ரூ.1 லட்சம் பரிசு தொகை வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். தகவல் தெரிந்தவர்கள் 9444833999, 94442 73223 என்ற செல்போன் எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+