நாமக்கல்: நடத்தையில் சந்தேகம்: மனைவி முகத்தில் ஆசிட் வீசிய கணவன்

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கழிவறையை சுத்தம் செய்யும் ஆசிட்டை மனைவியின் முகத்தில் ஊற்றிய கணவன் கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள துத்திக்குளத்தை சேர்ந்தவர் சசிக்குமார் (35). இவருக்கு லதா (27) என்ற மனைவியும், 3 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

லதா நாமக்கல்லில் உள்ள ஒரு பிரபல ஜவுளிக் கடையில் விற்பனை பிரிவில் வேலை செய்து வருகிறார். இவர் தினமும் நாமக்கல்லுக்கு பேருந்தில் சென்று வருவதாலும், தான் வேலை செய்யும் கடையில் பணியாற்றும் மற்ற ஆண்களுடன் பேசி பழகுவதாலும் லதாவின் நடத்தையில் சசிக்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனால், லதாவுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சசிக்குமார், கழிவறை சுத்தம் செய்யும் ஆஸிட்டை எடுத்து மனைவி லதா முகத்தில் ஊற்றியுள்ளார்.

காயமடைந்த லதா, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் லதா கொடுத்த வாக்குமூலத்தை தொடர்ந்து சேந்தமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து சசிக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+