குழந்தையின் பிறந்தநாள் கேக்கில் ராஜினாமா கடிதம் எழுதி அனுப்பிய அரசு ஊழியர்!
லண்டன்: இங்கிலாந்தில் பிறந்த குழந்தையுடன் கொஞ்சி மகிழ்வதற்காக 'கேக்'கில் ராஜினாமா கடிதம் எழுதிஅனுப்பி இருக்கிறார் அரசு ஊழியர் ஒருவர்.
இங்கிலாந்தில் உள்ள கேம்ப்ரிட்ஜ்ஷைர் பகுதியில் வசிப்பவர் கிரிஸ் ஹோல்ம்ஸ் (31). ஸ்டாண்ஸ்டெட் விமான நிலையத்தில் குடியுரிமை துறை அதிகாரியாக பணியாற்றி வரும் இவர், கடந்த 2 ஆண்டுகளாக கேக் தயாரித்து விற்கும் தொழிலையும் பகுதி நேரமாக செய்து வருகிறார்.
கடந்த திங்கட்கிழமை, வழக்கம் போல் வேலை நேரத்தில் விமான நிலையத்திற்கு சென்ற இவர், அழகான அட்டைப் பெட்டியை உயரதிகாரியிடம் தந்தார்.

பெட்டியில் என்ன?
பெட்டியின் உள்ளே செவ்வக வடிவில் ஒரு பெரிய கேக் இருந்தது. கேக்கின் மேல் பகுதியில் வெள்ளை நிற 'ஐசிங்'கின் மீது, கருப்பு நிற கிரீமால் தனது ராஜினாமா கடிதத்தை கிரிஸ் ஹோல்ம்ஸ் முத்து முத்தான கையெழுத்தில் எழுதி இருந்தார்.

நா அப்பா ஆகிட்டேன்...
'நிர்வாகத்திற்கு..... சமீபத்தில் தந்தையான பிறகு, வாழ்க்கை எவ்வளவு விலை மதிப்பு மிக்கது என்பதை நான் உணரத் தொடங்கியுள்ளேன். இந்த வாழ்க்கையில் என்னை சேர்ந்தவர்கள் மற்றும் எனது மகிழ்ச்சிக்கு உகந்த வகையில் நேரத்தை செலவிட வேண்டியது எவ்வளவு முக்கியமானது என்பதையும் நான் நினைத்துப் பார்க்கிறேன்.

ஃபுல் டைம் அப்பா...
இந்த காரணத்திற்காக எனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்கிறேன். இனி, எனது நேரத்தையும், ஆற்றலையும் குடும்பம் மற்றும் எனது கேக் தொழிலை கவனிப்பதற்காக செலவிட முடிவு செய்துள்ளேன்' என அந்த கடிதத்தில் (கேக்கில்) அவர் எழுதியுள்ளார்.

இனிப்பா ராஜினாமா...
தனது மனைவி கர்ப்பிணியாக இருந்த போதே ராஜினாமா செய்ய முடிவு செய்த கிரிஸ் ஹோல்ம்ஸ், அதை புதுமையாக செய்ய யோசித்து, யோசித்து ராஜினாமா கடிதத்தை கேக் வடிவில் தற்போது சமர்ப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications