டெல்லி சிறுமியைக் கற்பழித்த கொடூரன் கைது!

பீகார் மாநிலம் முசாபஃர்பூர் அருகே உள்ள கிராமம் ஒன்றில் இன்று அதிகாலை 2 மணி அளவில் அவன் கைதுசெய்யப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
25 வயதுள்ள மனோஜ்குமார் என்ற அந்த இளைஞருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்துள்ளது. அவரது மனைவி இரு தினங்களுக்கு முன்பு தனது தாய் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
டெல்லி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி, கடந்த 15 ஆம் தேதி வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போனார்.
பின்னர் கடந்த 17 ஆம் தேதி, அந்த சிறுமியின் வீட்டிற்கு கீழ் இருந்த மற்றொரு வீட்டில், உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரது உடலின் பல பாகங்களில் காயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளிக்கச் சென்றனர்.
எனினும் வழக்குப் பதிவு செய்ய காவல் துறையினர் மறுத்துள்ளனர். தகவலறிந்த மக்கள் சிறுமி அனுமதிக்கப்பட்டிருந்த தயானந்த் மருத்துவமனை வாசலில் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.
மேலும், இந்த போராட்டத்தில், பங்கேற்ற மற்றொரு சிறுமியை, காவல் துறை துணை ஆணையர் அலாவத், பலமுறை கன்னத்தில் அறைந்தது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
இதனிடையே, தயானந்த் மருத்துவமனையில் வசதிகள் போதவில்லை என்று கூறப்பட்டதைத் தொடர்ந்து பாலியல் கொடுமைக்கு ஆளான 5 வயது சிறுமி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications