சீனாவில் கடும் நிலநடுக்கம்... 100 பேர் பலி: 400 பேர் படுகாயம்
ஷாங்காய்: சீனாவில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தில் 100 பேர் பலியானார்கள். 400 பேர் படுகாயம் அடைந்தனர். கட்டிடங்கள் நொறுங்கின. இதனால் இடிபாடுகளில் சிக்கி மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
சீனாவின் தென் மேற்கு சிசுவான் மாகாணத்தில் இருந்து 80 மைல் தொலைவில் உள்ளது யான் நகரம். லுஷான் கவுன்டியில் அமைந்துள்ள இந்நகரில் இன்று காலை பூமிக்கு அடியில் 12 கி.மீ. ஆழத்தில் பூகம்பம் ஏற்பட்டது. காலை 8.02 மணிக்கு பூகம்பம் ஏற்பட்டது. இந்த பூகம்பம் சீனாவின் புவியியல் ஆய்வு மையத்தில் ரிக்டரில் 7 புள்ளி ஆகவும், அமெரிக்க புவியியல் மையத்தில் ரிக்டரில் 6.6 புள்ளிகளாகவும் பதிவானது.

அலறி ஓடிய மக்கள்
பூகம்பம் ஏற்பட்ட போது, வீட்டில் தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறியடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். மின்வயர்கள் அறுந்து விழுந்தன. தகவல் தொடர்பு சாதனம் முழுவதும் துண்டிக்கப்பட்டது. இடிபாடுகளில் 400க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஏராளமானோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணியில் 2000க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். தற்போது ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சீனா செங்டஸ் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
சீனாவில் கடந்த 2008 ம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாயினர். சீன வரலாற்றில் இது மிகப்பெரிய மோசமான சம்பவம் ஆகும். இதை தொடர்ந்து அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை அச்சுறுத்தி வருகிறது. உயிரிழப்பு சம்பவமும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது.
-
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications