5 வயது டெல்லி சிறுமியை கற்பழித்த மற்றொரு காமக் கொடூரன் இன்று பீகாரில் கைது

கிழக்கு டெல்லியில் உள்ள காந்தி நகரைச் சேர்ந்த 5 வயது சிறுமி கடத்தி கற்பழிக்கப்பட்டு தாக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த சிறுமி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் போலீசார் சிறுமியை கற்பழித்த மனோஜ் குமாரை22) தேடி வந்தனர்.
மனோஜ் கடந்த சனிக்கிழமை பீகாரில் வைத்து கைது செய்யப்பட்டு டெல்லிக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டார். விசாரணையில் மனோஜுடன் சேர்ந்து அவரது கூட்டாளி பிரதீப்பும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. பீகாரைச் சேர்ந்த பிரதீப் காசியாபாத்தில் உள்ள லோனியில் வாடகை வீட்டில் தங்கியிருந்ததாக மனோஜ் போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து தனிப்படை போலீசார் பிரதீப்பை தேடி பீகார் விரைந்தனர்.
பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் பிரதீப்பை டெல்லி மற்றும் பீகார் போலீசார் சேர்ந்து இன்று காலை கைது செய்தனர். இதற்கிடையே இந்த இருவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.
முன்னதாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பிறகு அவரை கொன்றுவிடலாம் என்று மனோஜ் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் சிறுமியை தாக்கியுள்ளனர். இதில் சிறுமி இறந்துவிட்டதாக நினைத்து இருவரும் ஆளுக்கொரு பக்கம் ஓட்டம் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications