முகேஷ் அம்பானிக்கு சிஆர்பிஎப் கமாண்டோக்கள் 'இசட்' பிரிவு பாதுகாப்பு
மும்பை: ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானிக்கு இசட் பிரிவு உயர் பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது. அவர் மீது தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக வந்த உளவுப் பிரிவு தகவல்களையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய ரிசர்வ் போலீஸ் படை கமாண்டோக்கள்...
மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கருப்புப் படை கமாண்டோக்கள் அவருக்கு இந்தப் பாதுகாப்பை அளிப்பர். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

நவீன ஆயுதங்கள்..
இந்தப் பாதுகாப்பின்படி முகேஷ் அம்பானிக்கு ஒரு பைலட் காரும், அவரது காருக்குப் பின்னால் நவீன ஆயுதங்கள் தாங்கிய படையினரும் பாதுகாப்பாக இருப்பர். நாட்டில் எந்தப் பகுதிக்கு அவர் சென்றாலும் 24 மணி நேரமும் இந்தப் பாதுகாப்பு அளிக்கப்படும்.

தனி நபருக்கு முதல் முறையாக இசட் பிரிவு பாதுகாப்பு
முகேஷ் பாதுகாப்புக்காக உடனடியாக 28 பேரை மத்திய ரிசர்வ் படை முகேஷ் நியமித்துள்ளது. நாட்டிலேயே ஒரு தனிப்பட்ட நபருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இந்தியன் முஜாகிதீன் மிரட்டல்...
சமீபத்தில் முகேஷ் அம்பானிக்கு இந்தியன் முஜாகிதீன் அமைப்பிடமிருந்து பல்வேறு மிரட்டல் கடிதங்கள் வந்தன. இது குறித்து மும்பை போலீசாருக்கும் மத்திய அரசுக்கும் முகேஷ் அம்பானி தரப்பிலிருந்து தகவல் தரப்பட்டது நினைவுகூறத்தக்கது.

மும்பை போலீசாரும் களமிறங்கினர்...
மத்திய பாதுகாப்புப் படையினர் தவிர மும்பை போலீசாரும் முகேஷ் அம்பானியின் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். தெற்கு மும்பையில் அல்டாமவுண்ட் ரோட்டில் உள்ள அவரது மாபெரும் மாளிகைக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மேலும் அந்த வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தனது இசட் பிரிவு பாதுகாப்புக்கான செலவை முகேஷ் அம்பானியே ஏற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications