திருப்பதி கோவில் அன்னதானத்தில் இனி சப்பாத்தி நஹி... நாளை தொடங்குகிறது வசந்த உற்சவம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டுக்கான வசந்த உற்சவம் நாளை (23-ந் தேதி) தொடங்கும்மொத்தம் 3 நாள் விழா நடைபெறுகிறது. முதல் நாள் விழாவான நாளை காலை 8 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்பசாமி மாட வீதிகளில் உலா வந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு மலையப்பசாமிக்கு அபிஷேகம், நிவேதனம், ஆஸ்தான சேவை நடக்கிறது.
2-வது நாளான புதன் கிழமை மலையப்பசாமி தங்கரதத்தில் மாடவீதிகளில் உலா வருகிறார். பின்னர் வசந்த மண்டபத்தில் விசேஷ பூஜை நடக்கிறது. கடைசி நாள் (25-ந் தேதி) வசந்த மண்டபத்தில் மலையப்பசாமி, ஸ்ரீசீதா ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர், ருக்மணி சமேதமாக கிருஷ்ணர் ஆகியோர் எழுந்தருளிகிறார்கள்.
கல்யாணமாம்.. கல்யாணம்
அங்கு சிறப்பு பூஜை நடக்கிறது. பக்தர்கள் ரூ.300 கட்டண தரிசன டிக்கெட் பெற்று பூஜையில் பங்கேற்கலாம். வசந்த உற்சவத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோவிலில் 3 நாட்கள் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, கட்டண பிரமோற்சவம், சகஸ்வர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்படுகிறது.
அன்னதானத்தில் சப்பாத்தி...
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு காலை 11 மணி முதல் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. வடமாநில பக்தர்களுக்கு அரிசி சாதத்துக்கு பதில் சப்பாத்தி வழங்கப்படுகிறது.
நோ, சப்பாத்தி...
சப்பாத்தி தயார் செய்யும் எந்திரம் அடிக்கடி பழுதாகி வந்ததால் பக்தர்களுக்கு சப்பாத்தி வழங்குவதில் தடங்கல் ஏற்பட்டது. தற்போது சப்பாத்தி எந்திரம் முற்றிலும் பழுதாகி விட்டது. அதனை சரிசெய்ய தொழில்நுட்ப வல்லுநர்கள் கிடைக்கவில்லை. இதனால் சப்பாத்தி வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
டவுட் தான் சப்பாத்தி...
எந்திரம் சீராக இயங்கும் பட்சத்தில் இந்த திட்டத்தை மீண்டும் அமுல்படுத்தப்படும் என்று நிர்வாக அதிகாரி எல்.வி.சுப்பிரமணியம் கூறினார். மேலும் இரவு நேர வி.ஐ.பி. தரிசனமும் விரைவில் ரத்து செய்யப்படும் என்று அவர் கூறினார்.
ஊழியர்கள் தான் காரணம்...
அன்னதான கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு ஊழியர்களின் தவறான செயலே காரணம் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்து நடக்காமல் தடுக்கப்படும் என்றும் எல்.வி.சுப்பிரமணியம் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications