சிதம்பரத்தில் செயின் பறிப்பில் சிக்கிய பெண்களிடம் கத்தை கத்தையாக கள்ள நோட்டுகள்!

Subscribe to Oneindia Tamil

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் செயின் பறிக்க முயன்ற போது சிக்கிய பெண்களிடம் ரூ10 கள்ள நோட்டு கத்தை கத்தையாக பிடிபட்டது.

சிதம்பரம் கொத்தவால்தெருவைச் சேர்ந்த பட்டுசாமி மனைவி கல்யாணி, நடராஜர் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவரது கழுத்தில் இருந்த 2 பவுன் செயினை இரு பெண்கள் பறிக்க முயற்சித்தனர். இதனால் கல்யாணி உதவி கேட்டு கூச்சல் போட்டார்.

அப்போது பாதுகாப்புக்கு இருந்த 2 பெண் போலீசார் செயினைப் பறிக்க முயன்ற பெண்களை விரட்டிப் பிடித்தனர். சிக்கிய இருவரும் திருச்சி சமயபுரம் கந்தப்பேட்டையை சேர்ந்த மணிமேகலை, கஸ்தூரி என தெரியவந்தது. மேலும் அவர்களிடம் போலீசார் நடத்திய சோதனையில் கத்தை கத்தையாக ரூ10 கள்ள நோட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.

ரூ10 கள்ள நோட்டு கட்டுகள் அந்த பெண்களுக்கு எப்படி கிடைத்தது? என்பது குறித்து சிதம்பரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்யாணியின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறிக்க முயன்றனர். கல்யாணியின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு பாதுகாப்பில் இருந்த சங்கத்தமிழ் உள்ளிட்ட இரு மகளிர் போலீஸார் அப்பெண்கள் துரத்தி பிடித்து நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் விசாரணையில் திருச்சி சமயபுரம் கந்தப்பேட்டையைச் சேர்ந்த மணிமேகலை (27), அதே பகுதியைச் சேர்ந்த கல்தூரி (20) என தெரியவந்தது. மேலும் அப்பெண்கள் கட்டாக ரூ.10 கள்ள நோட்டு வைத்தி்ருந்ததும் விசாரணையில் தெரியவந்து நகர போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+