Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரை இலங்கைக்கான இந்திய தூதராக நியமிக்க வேண்டும்: திருமா

Subscribe to Oneindia Tamil

Thirumavalavan
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரை இலங்கைக்கான இந்திய தூதராக நியமிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

நாள்தோறும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுகின்றனர். பலர் சிறைபிடிக்கப்பட்டு இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழக மக்களும் தமிழக அரசும் எத்தனையோ போராட்டங்களை நடத்தியும் கூட இந்திய அரசு இலங்கைக் கடற்படையின் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் இலங்கைக் கடற்படையைச் சேர்ந்த 250 பேருக்கு இந்தியக் கடற்படைக் கப்பல்களில் பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையைச் சேர்ந்த சுஜாதா, தரங்கிணி,வருணா ஆகிய மூன்று கப்பல்கள் இந்தப் பயிற்சியை அளித்துள்ளன. பயிற்சி பெற்ற சிங்களப் படையினருக்கு இந்திய தூதரகம் சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய இலங்கைக் கடற்படை துணைத் தளபதி ஜெயந்த் கொலம்பகே என்பவர் இலங்கைக் கடற்படையினரில் 80 சதவீதம் பேருக்கு இந்தியா தான் பயிற்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

இது தமிழக மக்களைப் புண்படுத்துவதாக இருக்கிறது. தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் இந்திய அரசின் ஆதரவோடுதான் நடத்தப்படுகிறதோ என்ற ஐயத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.

இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியா பயிற்சி அளிப்பதும் அவர்கள் இந்திய மீனவர்களையே தாக்குவதும் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. தனது நாட்டு குடிமக்களைக் கொல்பவர்களுக்குத் தாங்களே பயிற்சி அளிக்கும் இத்தகைய கேவலம் உலகில் வேறு எங்குமே நடந்ததில்லை.

இந்திய அரசு இலங்கைப் படையினருக்குப் பயிற்சி அளிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம். இலங்கைக்கான இந்தியத் தூதராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மத்திய அரசு தொடர்ந்து தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படுவதென்பது அதற்கு தேசிய ஒருமைப்பாட்டின் மீது நம்பிக்கை இல்லையோ என்ற கேள்வியைத்தான் எழுப்புகிறது. இது இந்தியாவின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று சுட்டிக்காட்டுகிறோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+