லோக்சபா தேர்தலில் லக்னோவில் போட்டியிடுகிறார் நரேந்திர மோடி?

குஜராத் முதல்வரான நரேந்திர மோடிதான் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் என்பதை பல நேரங்களில் அக்கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங் மறைமுகமாக உணர்த்தி வருகிறார். இந்த நிலையில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் போட்டியிட்ட லக்னோ தொகுதியில் 'பிரதமர் வேட்பாளர்' நரேந்திர மோடி போட்டியிட திட்டமிட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதற்கு ராஜ்நாத்சிங்கும் ஆதரவு தெரிவித்திருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
நரேந்திர மோடியின் மிக நெருங்கிய நண்பரான அமித் ஷாவும் இனி மோடிக்கு உதவியாக டெல்லி அரசியல்தான் என முடிவு செய்துவிட்டாராம். அவரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருக்கிறார். அவர் அனேகமாக அத்வானி போட்டியிட்டு வென்ற காந்தி நகர் தொகுதியில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த காந்திநகர் தொகுதியில்தான் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி போட்டியிட்டு எம்.பியானார். ஆனால் அத்வானி, தற்போது மோடிக்கு எதிரான முகாமில் இருப்பதால் அவர் இம்முறை மத்திய பிரதேச மாநிலம் போபாலுக்கு இடம் பெயர முடிவு செய்திருக்கிறார்.
தற்போது காந்திநகர் தொகுதியில் அமித் ஷா போட்டியிட விருப்பம் தெரிவித்திருப்பதாலேயே மோடியும் 'பிரதமர் வேட்பாளர்' தொகுதியான லக்னோவுக்கு புலம் பெயர முடிவு செய்திருப்பதாக டெல்லி பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications