புனே: ஸ்பெஷல் கிளாஸுக்கு வந்த 15 வயது மாணவி வகுப்பறையில் கற்பழிப்பு
புனே: மகாராஷ்டிராவில் 15 வயது மாணவி பள்ளி வகுப்பறையில் கற்பழிக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து 50 கிமீ தொலைவில் உள்ளது ஷிரூர். அங்குள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் 15 வயது மாணவி அடுத்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகிறார். பத்தாம் வகுப்புக்கு போகும் மாணவர்களுக்கு தற்போது சிறப்பு வகுப்புகள் நடந்த வருகிறது. ஷிரூருக்கு அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் மாணவி வகுப்புக்கு வழக்கம் போல் நேற்று சைக்கிளில் வந்துள்ளார்.
சைக்கிளை நிறுத்திவிட்டு பள்ளி வளாகத்தில் தண்ணீர் குடிக்கச் சென்ற மாணவியை 12ம் வகுப்பில் தோல்வி அடைந்த பிம்பர்கேத் கிராமத்தைச் சேர்ந்த வைபவ் நாராயண்(20) இழுத்துச் சென்று ஏழாம் வகுப்பறையில் வைத்து கற்பழித்துவிட்டு தப்பியோடிவிட்டார். இதில் அதிர்ச்சி அடைந்த மாணவி இடத்தை விட்டு நகராமல் அங்கேயே அதிர்ச்சியில் இருந்துள்ளார்.
இதற்கிடையே மாணவியின் மாமா ஏதேச்சையாக பள்ளிக்கு வந்தபோது வகுப்பில் அவரைக் காணவில்லை. வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டபோது மாணவி காலையிலேயே பள்ளிக்கு கிளம்பிவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து உறவினரும், ஆசிரியர்களும் சேர்ந்து மாணவியைத் தேடினர். அப்போது ஏழாம் வகுப்பறையில் அவர் இருந்ததை கண்டுபிடித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வைபவை கைது செய்தனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications