விருதுநகர் அருகே பட்டாசு ஆலை விபத்து- காயமடைந்த இருவர் பலி
Subscribe to Oneindia Tamil
மதுரை: விருதுநகர் அருகே குந்தளப்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் படுகாயமடைந்து மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
விருதுநகர் அருகே உள்ளது குந்தளபட்டியில் இயங்கி வந்த பட்டாசு ஆலை ஒன்றில் சில நாட்களுக்கு முன்பு பராமரிப்பு பணி நடைபெற்றது. அப்போது தரையில் படிந்திருந்த கரிமருந்து திடீரென தீப்பிடித்தது. இதில் கருப்பசாமி, ராஜூ ஆகியோர் படுகாயமடைந்தனர். இருவரும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
ஆனால் நேற்று இரவு சிகிச்சை பலன் அளிக்காமல் கருப்பசாமி, ராஜூ ஆகியோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications