'லடாக் பகுதியில் இருந்து திரும்பிச் செல்ல முடியாது': முரண்டு பிடிக்கிறது சீனா!

காஷ்மீர் மாநிலம் லடாக் பிராந்தியத்தில் தவுலத் பெக் ஆல்டி பகுதியில் கடந்த 15-ந் தேதி சீன ராணுவம் ஊடுருவியது. இந்திய பகுதிக்குள் 10 கி.மீ. தூரம் வரை வந்து விட்ட சீன படைகள், அங்கு கூடாரம் அமைத்து முகாமிட்டன.
மேலும், சீன ஹெலிகாப்டர்களும் அங்கு பறந்து சென்றன. இதையடுத்து டெல்லியில், இந்தியாவுக்கான சீன தூதர் வெய் வெய்யை இந்திய வெளியுறவு செயலாளர் ரஞ்சன் மத்தாய் நேரில் அழைத்து, இந்தியாவின் கவலைகளை தெரிவித்தார்.
இப்பிரச்சனையை தீர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், மத்திய வெளியுறவு அமைச்சக இணை செயலாளர், சீன வெளியுறவு அமைச்சக இணை செயலாளரை தொடர்பு கொண்டு முறையிட்டார்.
இந்நிலையில், இப்பிரச்சினை தொடர்பாக, இந்திய-சீன ராணுவங்களின் பிரிகேடியர் அந்தஸ்திலான அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுசுல் செக்டாரில் இப்பேச்சுவார்த்தை நடைபெற்றது.
வாபஸ் பெற வலியுறுத்தல்:
இந்திய தரப்புக்கு பிரிகேடியர் பி.எம்.குப்தாவும், சீன தரப்புக்கு சீனியர் கர்னல் அயன் யாந்தியும் தலைமை தாங்கினர். இந்த பேச்சுவார்த்தையின்போது, எல்லை கோடு பற்றிய உண்மை நிலவரங்கள், இருதரப்பிலும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. பேச்சுவார்த்தையின்போது, ஊடுருவிய இடத்தில் இருந்து சீன படைகளை திரும்ப பெறுமாறும், ஊடுருவலுக்கு முந்தைய நிலையை கடைபிடிக்குமாறும் இந்தியா வற்புறுத்தியது.
பதுங்கு அரண்களை இடிக்க வேண்டும்:
ஆனால், அதை ஏற்க சீனா மறுத்து விட்டது. அந்த பகுதி, தங்களுக்கு சொந்தமானது என்றும், எனவே, ஊடுருவல் நடக்கவில்லை என்றும், திரும்பி செல்ல முடியாது என்றும் சீனா கூறியது. மேலும், புக்ட்சே என்ற இடத்தில், பதுங்கு அரண்களை இந்தியா கட்டியதற்கு சீனா ஆட்சேபணை தெரிவித்தது. அந்த அரண்களை இடித்து விடுமாறு கூறியது.
தோல்வி:
இந்த பேச்சுவார்த்தையில், சீனாவிடம் இருந்து எந்த சாதகமான பதிலும் கிடைக்கவில்லை. இதனால், 3 மணி நேரமாக நடைபெற்ற பேச்சுவார்த்தை, தோல்வியில் முடிவடைந்தது.
இதனால் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்த பிரச்சனை, எல்லை கோடு தொடர்பான மாறுபட்ட புரிந்து கொள்ளல்களால் எழுந்துள்ளது. இருதரப்பு படைகள் இடையிலான நேருக்கு நேர் சூழ்நிலையாக இதை நாங்கள் பார்க்கிறோம். இருப்பினும், எல்லையில் அமைதி நிலவுகிறது. தற்போது, இருநாட்டு ராணுவ அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அதில், அமைதி தீர்வு காணப்படும் என்று நம்புகிறோம். இரு நாட்டு ஒப்பந்தங்களின் அடிப்படையில், கடந்த காலங்களில் கூட இத்தகைய பிரச்சனைகளை அமைதியான முறையில் தீர்த்துள்ளோம். ஏப்ரல் 15ம் தேதிக்கு முந்தைய நிலையை (படைகளை திரும்ப பெறுதல்) கடைபிடிக்குமாறு சீனாவிடம் வற்புறுத்தி உள்ளோம் என்றார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications