பாக். அரசிடம் 'ரகசிய ஊதியம்' பெற்ற பத்திரிகையாளர்கள் பட்டியலை வெளியிட்டது உச்சநீதிமன்றம்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டு செய்தித் துறை அமைச்சகத்தின் ரகசிய நிதியைப் பெற்று வரும் பத்திரிகையாளர்கள் பட்டியலை அந்நாட்டு உச்சநீதிமன்றம் பகிரங்கமாக வெளியிட்டிருக்கிறது.
2011-12ஆம் ஆண்டு ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி அரசாங்கத்தால் ஊடகத்துறையினருக்கு பணம் கொடுக்கப்பட்டது பற்றி விசாரணை நடத்தக் கோரி 2 தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் ஒரு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது செய்தித் துறை அமைச்சகத்திடம் இருந்து பணம் பெற்ற பத்திரிகையாளர்கள் பட்டியலை உச்சநீதிமன்றம் வெளியிட்டது. மேலும் இந்த விவரங்களை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தமது இணையதளத்திலும் வெளியிட்டது. மொத்தம் ரூ177.98 மில்லியன் தொகை இப்படி கொடுக்கப்பட்டிருக்கிறது.
இருப்பினும் உச்சநீதிமன்றம் பகிரங்கப்படுத்தியிருக்கும் அந்த செய்தியாளர்கள் இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. கடந்த ஆண்டு இந்த ரகசிய நிதியை முடக்கி வைத்தும் ரகசிய நிதி யார் யாருக்கு கொடுக்கப்பட்டடு என்பது குறித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனாலும் அந்நாட்டு செய்தித் துறை அமைச்சகம் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications