இலவச கண் அறுவை சிகிச்சை செய்த 8 பேர் பார்வை இழந்த பரிதாபம்
கான்பூர்: கான்பூரில் இலவச முகாமில் கண் அறுவைசிகிச்சை செய்துகொண்ட 8 பேர் பார்வை இழந்துள்ளனர். இதில் ஐவர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில், கான்பூர் அருகே உள்ள கரவ்சா என்ற கிராமத்தில், கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதியன்று, சமூக சேவை நிறுவனம் ஒன்றின் சார்பாக, இலவச கண் சிகிச்சை முகாம் ஒன்று நடைபெற்றது. இதில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிலர், விழித்திரை மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டனர். அதன்பின்னர், அவர்களுக்கு கண்ணில் எரிச்சல் தோன்றியுள்ளது. என்ன செய்வது என்று தெரியாமல், அவர்க கடந்த இரண்டு மாதங்களாக, ஒவ்வொரு மருத்துவமனையாக சென்றுள்ளனர்.
மாவட்ட அரசு மருத்துவமனையில், அவர்களைப் பரிசோதித்த அரசு மருத்துவர்கள், அவர்களின் கண் பார்வை திரும்பக் கிடைப்பது குறித்து எதுவும் கூற இயலவில்லை என்றனர். மேலும், பெரும்பாலானோருக்கு கண்களில் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களின் பார்வைத்திறன் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கண்பார்வை பாதிக்கப்பட்ட எட்டு பேரில், ஐந்து பேர் பெண்களாவர். அறுவைசிகிச்சை செய்த தொண்டுநிறுவனம் குறித்து அவர்கள் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்படவில்லை. அவர்களுக்குத் தக்க நஷ்டஈடு வழங்கப்படவேண்டும் என்றும், தொண்டுநிறுவனத்தின் வாயிலாக சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், சிங் என்ற வாலிபர் ஒருவர் தெரிவித்தார்.
இலவச சிகிச்சை அளிப்பதாகக் கூறிய அவர்கள், சிகிச்சை முடிந்தபின் ஒவ்வொருவரிடமும் தலா 2,500 முதல் 4,000 வரை பணம் பெற்றுக்கொண்டதாகப் பாதிக்கப்பட்ட பாலா பிரசாத் கூறினார். சிகிச்சைக்குமுன் மங்கலாகத் தெரிந்த பார்வை, தற்போது சுத்தமாகத் தெரியவில்லை என்று அவர் வேதனைப்பட்டார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications