மாணவர்கள் போலீசுக்கு உதவும் திட்டம்: சமூகக் காவலர் திட்ட தொகையை உயர்த்த மத்திய அரசு முடிவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஏற்கனவே கேரளாவில் உள்ள, மாணவர்கள் காவல்துறைக்கு உதவும் திட்டத்தை மற்ற எல்லா மாநிலங்களிலும் அறிமுகப்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

நாள்தோறும் பெருகிவரும் காவல்துறையினரின் பணிச் சுமைகளைக் குறைக்கும் வகையில், பொதுமக்களையும் சிறுசிறு வேலைகளில் ஈடுபடுத்தும், , மத்திய அரசு, ஆண்டுதோறும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஐந்து லட்ச ரூபாய் கொடுத்து வந்தது. இதை பத்து லட்சமாக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.

மேலும் காவல்துறை வளர்ச்சி மற்றும் ஆய்வு மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களை காவல்துறையினருக்கு உதவி புரிய வைக்கும் திட்டம் குறித்தும், மத்திய அரசு ஆலோசித்து வருகின்றது. கேரளாவில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

மாணவர்களுக்கு பயிற்சி:

உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சட்டத்தின் விதிமுறைகளை மதிக்கவும், சமூகம் குறித்த வழிப்புணர்வு, வாழ்வியல் ஒழுங்குமுறைகள், குற்றங்களை எதிர்க்கும் துணிவு மற்றும் அடித்தட்டு மக்களிடம் இரக்கம் போன்ற பண்புகள் வளரவும் பயிற்சி அளிக்கப்படுகின்றது. அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், அரசு சாராப் பள்ளிகள் என அனைத்துப் பள்ளி மாணவர்களும், பயிற்சி முகாம்கள் மூலமும், வகுப்பறை செயல்பாடுகள் மூலமும் இதற்குரிய பயிற்சிமுறைகளைப் பெறுகின்றனர்.

காவல்துறையினர் இம்மாணவர்களுக்கு கலந்தாலோசனைக் கூட்டங்களை நடத்தி, சமூகத்தில் செய்யவேண்டியவற்றையும், செய்யக்கூடாத செயல்களையும் அவர்களுக்குத் தெளிவு படுத்துகின்றனர் .வாரத்தில் இரண்டுமுறை போக்குவரத்துக் காவலர்களாலும் , உடற்கல்வி பயிற்சியாளர்களாலும் இவர்களுக்கு செயல்முறைப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

நோக்கம்:

இந்தத் திட்டத்தின் நோக்கமே, காவல்துறையினருடன் பொதுமக்களும் இணைந்து செயல்பட்டு, சட்ட விதிமுறைகளைக் கடைப்பிடித்து, குற்றங்கள், பெண்களுக்கான சமூக அநீதிகள் நிகழாவண்ணம் தடுத்து, அமைதியுடன் வாழத் துணை நிற்க வேண்டும் என்பதாகும் அதிகரிக்கப்பட்டுள்ள சமூகக் காவலர் நிதி, மத்திய அரசின் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், பிரச்சினைக்குரிய இடங்களாகக் கருதப்படும் 106 மாவட்டங்களுக்கு வழங்கப்பட உள்ளது என்று, மத்திய அரசின் உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+