டெல்லியில் என்ன நடக்கிறது.. நினைக்கவே அதிர்ச்சியாக இருக்கிறது: ஹைகோர்ட் நீதிபதி கவலை
டெல்லி: டெல்லியில் என்ன நடக்கிறது. .பலாத்கார சம்பவங்களை நினைத்தாலே அதிர்ச்சியாக இருக்கிறது.. இப்படி நடக்க என்ன காரணம் என்பதை உடனே கண்டறிய வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி. முருகேசன் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியில் அதிகரித்திருக்கும் பலாத்கார சம்பவங்கள் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, டெல்லியில் என்ன நடக்கிறது என்று நினைத்தால் அதிர்ச்சியாக உள்ளது. இப்படி நடக்க என்ன காரணம் என்பதை முதலில் கண்டறிய வேண்டும். எங்கேயோ, எதிலேயோ தவறு நடக்கிறது. மக்கள் பலரும் முட்டாளாகி வருகின்றனர். இதுபோன்று திடீரென பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரிக்கக் காரணம் என்ன என்பதை டெல்லி காவல்துறையினர் கண்டறிந்து, உடனடியாக அதன் ஆணி வேரை பிடுங்க வேண்டும்.
இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் பெரும்பாலான குற்றவாளிகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்து தங்கியிருப்பவர்களாகவே உள்ளனர். எனவே அவர்கள் இதுபோன்ற தவறுகளில் ஈடுபடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்லியில் நடந்து கொண்டிருப்பதை பார்க்கும் போது அனைவருமே கவலை அடைந்துள்ளனர். சமீபத்தில் 5 வயது சிறுமிக்கு என்ன நேர்ந்திருக்கிறது என்று பாருங்கள். எனவே, தற்போது இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க என்ன வழி என்பதை பார்க்க வேண்டும். இதுபோன்ற குற்றங்கள் அதிகம் நடக்கும் பகுதிகளில் உள்ள காவல்துறையினருக்கு சிறப்பு பயிற்சி அளித்து, குற்றச் செயல்களை தடுக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதி முருகேசன் தெரிவித்துள்ளார்.
-
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications