மாணவர்களுக்கு இலவச லேப் டாப், 1 ரூபாய்க்கு கிலோ அரிசி: கர்நாடக காங். தேர்தல் அறிக்கை!

பெங்களூரில் நேற்று நடைபெற்ற விழா ஒன்றில் மத்திய அமைச்சர் ஏ.கே. ஆண்டனி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்..
கன்னட வழி கட்டாயம்
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 1 கிலோ அரிசி 1 ரூபாய் விலையில் 30 கிலோ அரிசி மாதந்தோறும் வழங்கப்படும், விவசாயிகளுக்கு வட்டி இல்லாமல் ரூ.2 லட்சம் வரையும், 3% வட்டியில் ரூ.5 லட்சம் வரையும் கடன் வழங்கப்படும். இயற்கை பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கப்படும்,வசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் தொடர்ச்சியாக 8 மணி நேரம் வழங்கப்படும். கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக லேப் டாப் கம்யூட்டர், டிஜிட்டல் நோட்பேடு ஆகியவை வழங்கப்படும், பள்ளிகளில் கன்னட வழி கல்வி கட்டாயமாக்கப்படும், 1-வது வகுப்பில் இருந்து ஆங்கிலம் ஒரு பாடமாக கற்பிக்கப்படும்.
2வது பெங்களூர் நகரம்
"கர்நாடக கல்யாண பாத" என்ற பெயரில் பீதரில் இருந்து சாம்ராஜ்நகர் வரை 8 வழிப்பாதை அமைக்கப்படும், அரசு வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பெற்ற அனைத்து வீட்டு கடன்களும் தள்ளுபடி செய்யப்படும், மாநிலத்தில் நடைமுறையில் உள்ள பாலி, பிரக்ரிட், கொங்கனி, துளு, கொடவா மற்றும் சமஸ்கிருதம் உள்ளிட்ட சிறுபான்மை மொழிகள் ஊக்விக்கப்படும்,
பிஜாப்பூர், பெல்லாரி, சித்ரதுர்கா மற்றும் ஹாசன் ஆகிய மாவட்டங்களை சுற்றுலா தலங்களாக மாற்றப்படும்,கிட்டூர் ராணி சென்னம்மா பெயரில் மகளிர் வங்கிகள் ஆரம்பிக்கப்படும். பெங்களூர் அருகே 2-வது நகரமாக இன்னொரு பெங்களூர் நகரம் உருவாக்கப்படும், நிர்வாக வசதிக்காக பெங்களூரை பிரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
-
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை












Click it and Unblock the Notifications