ஊழல் விவகாரத்தில் பாஜகவுக்கு சமரசமே கிடையாது: கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் அத்வானி

கர்நாடகா மாநில சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அத்வானி போகும் இடமெல்லாம் ஊழலுக்கு பாஜக இடம் கொடுக்காது என்று பேசி வருகிறார்.
நேற்று பிஜாப்பூர், பெல்காம் மாவட்டங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் அத்வானி பேசுகையில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேட்டில் வாஜ்பாய் பெயரை சேர்க்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. இது விசாரணையை திசை திருப்பும் முயற்சி. பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை அறிக்கையில் அவரது பெயர் இடம் பெற்றது மிகவும் வேதனைக்குரியது.
பாராளுமன்ற கூட்டுக் குழு தலைவர் தனது சுயநலத்திற்காக வாஜ்பாய் மற்றும் பாரதிய ஜனதாவின் பெயரை சேர்த்து இருக்கிறார். இது அரசியல் பழிவாங்கும் செயல். வாஜ்பாயின் பெயரை சேர்க்க முயற்சி செய்வது கண்டிக்கத்தக்கது ஆகும். இதுகுறித்து பார்லிமென்ட்டில் விவாதிக்க பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளது. ஜவஹர்லால் நேரு முதல் மன்மோகன்சிங் வரை பிரதமர் பதவி வகித்தவர்களில் மிக சிறந்த பிரதமராக வாஜ்பாய் செயல்பட்டார்.
வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அப்போது எந்த குற்றச்சாட்டும் எழவில்லை. ஊழலை பொறுத்தவரையில் பாரதிய ஜனதா சமரசத்திற்கு இடம் தராது என்றார் அவர்,
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications