ஊடுருவல் விவகாரம்:பாகிஸ்தானை மிரட்டுவதை போல சீனாவையும் எச்சரிக்க வேண்டும்: ஒமர் அப்துல்லா
ஜம்மு: எல்லையில் ஊடுருவல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பாகிஸ்தானை மிரட்டுவதைப் போல சீனாவையும் கடுமையாக எச்சரித்தால்தான் ஊடுருவல்கள் இனி நடைபெறாது என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துலா வலியுறுத்தியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் லோகாய்-மல்கார் என்ற இடத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உமர் அப்துல்லா, சீன ராணுவத்தினர் 15 கிலோ மீட்டர் தூரம் வரை இந்தியாவுக்குள் ஊடுருவி வந்துவிட்டதற்காக நாம் கத்தி கூப்பாடு போடுகிறோம். இதே நடவடிக்கையை பாகிஸ்தான் மேற்கொள்ளும் போது இருநாடுகளிடையேயான கிரிக்கெட் போட்டிகளை ரத்து செய்கிறோம், கால்பந்து விளையாட மாறுக்கிறோம், அமைதி உடன்படிக்கைகளை சஸ்பென்ட் செய்கிறோம்.. வர்த்தக உறவுகளை நிறுத்துகிறோம்...ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் இருந்து வெளியேறாதவரை இருதரப்பு வர்த்தகம் நடைபெறாது என்று அறிவிக்கிறோம். ஆனால் சீனாவின் ஊடுருவல் விவகாரத்தில் அப்படி ஒன்றும் கடுமையான நிலைப்பாட்டை நாம் மேற்கொள்ளவில்லை.. நாம் பேச்சுவார்த்தை மேஜை முன்புதான் அமர்ந்திருக்கிறோம்.
சீனாவுக்கு மத்திய அரசு கடுமையான ஒரு செய்தியைத் தெரிவிக்க வேண்டும். இது போன்ற ஊடுருவல்களால் அப்பிராந்தியத்தில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. 20 ஆண்டு கால ஆயுத வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வந்து இப்போதுதான் அமைதிப் பணிகளை தொடங்கியிருக்கிறோம். ஜம்மு காஷ்மீரத்து மக்கள் அமைதியாக வாழ உறுதியான நடவடிக்கைகள் அவசியம் என்றார் அவர்.
-
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
மிக பெரிய ஆபத்தில் சீனா.. இனி என்ன செய்தாலும் ஒன்னுமே மாறாது.. ஆனா இந்தியாவுக்கு பயங்கர லாபம்! -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா!












Click it and Unblock the Notifications