அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: 2 சிறுவர்கள் உட்பட ஐவர் பலி

Subscribe to Oneindia Tamil

அமெரிக்காவில் இலினாய்ஸ் மாகாணத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.

மான்செஸ்டர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பிற்குள் புகுந்த ரிக் ஓ'டெல் ஸ்மித் என்ற நபர் தன்னுடைய துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டான்.

இதில் 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த சம்பவத்தில் காயமடைந்த பெண் குழந்தை, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை காவல்துறையினர் துரத்திச் சென்று, சுட்டுக் கொன்றதாக இலினாய்ஸ் (Illinois) மாகாண காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எதற்காக அந்த நபர், துப்பாக்கிச்சூடு நடத்தினார் என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மான்செஸ்டர் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளிக்குள் நுழைந்த மர்ம நபர் 30க்கும் மேற்பட்ட சிறுவர்களை சுட்டுக் கொன்றது நினைவிருக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+