வங்கதேசத்தில் 8 மாடி கட்டிடம் இடிந்து 142 பேர் பலி, 1,000க்கும் மேற்பட்டோர் காயம்
டாக்கா: வங்க தேசத்தில் 8 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 142 பேர் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
வங்கதேச தலைநகர் டாக்கா அருகே உள்ள சவாரில் ரானா பிளாசா என்ற 8 அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இருந்தது. இந்த கட்டிடத்தில் ஆயத்த ஆடைகள் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தில் சுமார் 3,000 பேர் பணியாற்றினர். 9வது மாடி கட்டும் பணி நடந்து கொண்டிருக்கையில் நேற்று காலை 9 மணிக்கு அந்த கட்டிடம் திடீர் என்று இடிந்து விழுந்தது. 8 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து வெறும் 2 அடுக்கு ஆனது.
இந்த விபத்தில் 142 பேர் பலியாகியுள்ளனர். இடிபாடுகளில் இருந்து அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 1,000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மீட்பு பணி தொடர்ந்த நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் எத்தனை பேர் சிக்கியிருக்கிறார்கள் என்பது சரியாகத் தெரியவில்லை. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
நேற்று முன்தினம் 7வது மாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று யாரும் பணிக்கு வர வேண்டாம் என்று ஆயத்த ஆடை நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு கட்டிடம் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறி ஊழயிர்களை பணிக்கு வரவழைத்துள்ளது. இந்த தகவலை 6வது மாடியில் வேலை பார்த்த மர்ஜினா பேகம் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து கட்டிடத்தின் உரிமையாளரான ஆளுங்கட்சி நிர்வாகி ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி மொனிர் ஹுசைன் தெரிவித்தார். மேலும் ஆயத்த ஆடை நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications