வரதட்சணை: மனைவிக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்திய கணவன் குடும்பத்தினர்!
குண்டூர்: வரதட்சணைக் கேட்டு கணவனும், அவரது குடும்பத்தினரும் சேர்ந்து குண்டூரில் ஒரு பெண்ணிற்கு எச்.ஐ.வி ரத்தத்தை ஊசி மூலம் செலுத்தியுள்ளனர்.
கணவரின் உறவினரான மருத்துவ ஊழியர் மூலம் இக்கொடூர செயலை அவர்கள் அரங்கேற்றியுள்ளனர்.இச்சம்பவம் நடந்து 3 மாதங்களுக்குப் பிறகு, கடந்த புதன்கிழமை சம்பந்தப்பட்ட பெண் வேடுல்லாபள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் மூலமே வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
8 மாத கர்ப்பிணியான அவர், தனது கணவர் முத்யாலா ஸ்ரீனிவாச ரெட்டி, மாமனார் வெங்கடேஷ்வர ரெட்டி மற்றும் மாமியார் இந்திரவதி ஆகியோர் மீது வரதட்சனைக் கேட்டு கொடுமை படுத்தியதாகவும், எச்.ஐ.வி ரத்தத்தை கட்டாயப் படுத்தி தன் உடலில் செலுத்தியதாகவும் புகார் கூறியுள்ளார். மேலும், இந்த கொடூரச்செயலுக்கு உடந்தையாக இருந்ததாக கம்பவுண்டர் நாகிரெட்டி மீதும் புகார் தெரிவித்துள்ளார்.
போலீசார் புகாரையடுத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு மருத்துவ பரிசோதனை செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications