டெங்கு காய்ச்சலுக்கு 7ம் வகுப்பு மாணவி பலி

Subscribe to Oneindia Tamil

புளியங்குடி: புளியங்குடியில் டெங்கு காய்ச்சலுக்கு 7ம் வகுப்பு மாணவி ஒருவர் பலியாகியுள்ளார்.

புளியங்குடி ஊர்காவல் போத்தி கோவில் மூடுக்கு தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் சுதா. புளியங்குடியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். கடந்த சில நாட்களாக சுதாவுக்கு காய்ச்சல் இருந்து வந்தது. அவருக்கு புளியங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் காய்ச்சலின் தீவிரம் குறையாததால் சுதாவை கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு ரத்த மாதிரி எடுத்து கொள்ளப்பட்டது. இதில் சுதாவுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சுதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவரை தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சுதா பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து, பெற்றோர் உறவினர் கதறி அழுதனர்.

ஏற்கனவே கடந்த மாதம் புளியங்குடி நகராட்தி 2வது வார்டு அண்ணாமலை தெருவை சேர்ந்த மாரி்க்கண்ணன் மகன்கள் திருமலைக்குமார்,மதன்பாபு, சந்தோஷ் தம்பி, கலையரசன் மகன் தனுஷ், அப்பாத்துரை மகள் மதி, மற்றும் நாராயணன் என்ற 9 மாத குழந்தை ஆகியோருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் நெல்லையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இந்நிலையில் தற்போது புளியங்குடி 9வது வார்டில் டெங்கு காய்ச்சலால் மாணவி இறந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+